Wednesday, 11 April 2012

புதிய தலைமுறையின் ”நேக்கு-நோக்கு” தமிழன் விருதுகள்..!





அப்பாடா ஒரு வழியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழன் விருதுகளை அறிவித்து விட்டது.

எத்தனை அமர்க்களம்...!எத்தனை ஆர்ப்பாட்டம்..!எத்தனை விளம்பரங்கள்..

”பாழாய்ப்போன தமிழன் மீது இவர்களுக்கேன் திடீர் அக்கறை..?அவன் எப்படிப்போனால் இவர்களுக்கென்ன என்ன என்று நாம் யோசிக்கும் பொழுதே,அப்படியெல்லாம் தமிழன் மீது அக்கறையுடன் செயல்படும் ஆட்கள் தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் இல்லையே” என்று மண்டை காய்ந்து கொண்டிருந்தோம்.

இந்தநிலையில் தான் புதிய தலைமுறை தமிழன் விருதுகளை அறிவித்துள்ளது. விருதுப் பட்டியல் இதோ:



சமூக சேவை: சாதனைத் தமிழர் - டாக்டர் சாந்தா

சமூக சேவை: நம்பிக்கை நட்சத்திரம் – முரளிதரன் (சேவாலயா தொண்டு நிறுவனம்)

விளையாட்டு: சாதனைத் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

விளையாட்டு: நம்பிக்கை நட்சத்திரம் - காயத்ரி கோவிந்தராஜ் (தடகள வீராங்கனை);

இலக்கியம்: சாதனைத் தமிழர் – ஜெயகாந்தன்

இலக்கியம்: நம்பிக்கை நட்சத்திரம் - சு.வெங்கடேசன்;

அறிவியல்: சாதனைத் தமிழர் - எம்.எஸ்.சுவாமிநாதன்

அறிவியல்: நம்பிக்கை நட்சத்திரம் - ரேவதி (இயற்கை வேளாண்மை);

வணிகம்: சாதனைத்தமிழர் – வேணு சீனிவாசன்

வணிகம்: நம்பிக்கை நட்சத்திரம் - முருகானந்தன் (குடிசைத் தொழில்);

கலை: சாதனைத் தமிழர் - ஏ.ஆர்.ரஹ்மான்

கலை: நம்பிக்கை நட்சத்திரம் - சந்திரா (தப்பாட்ட கலைஞர்)







இந்த விருதுகளில் ஆயிரத்தெட்டு அபத்தங்கள் உள்ளது.அதில் நாம் சிலவற்றை மட்டும் எழுப்புகிறோம் இங்கு..

 

1)மக்கள் இந்த விருதினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லுகின்றார்கள்.இது யாருக்குத் தெரியும்.?வழக்கமாக இது போன்ற விருது விளையாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.

2)இந்த விருதில் வெற்றி பெற்றுள்ளவர்களில் 6 பேரில் 4 பேர் "அவாள்களாக" இருக்கிறார்கள்.நம்பிக்கை நட்சத்திரத்திலும் ஒருவர் இருக்கிறார்.

இதனை இப்படிப் பார்ப்போம்.இப்பொழுது இந்த விருதுப்பட்டியலில் உடையார் சாதியைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றிருந்தால் நாம் என்ன சொல்லியிருப்போம்?

இது தமிழன் விருதா இல்லை உடையார் சாதி விருதா?உடையாரைத் தவிர தமிழரில் வேறு யாரும் சாதனை செய்யவில்லையா?ஏன் இம்புட்டு வெறி?

விருது கொடுப்பவர் உடையார் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சாதி வெறியால் தனது சாதியைச் சேர்ந்தவருக்கு பச்சமுத்து (பாரிவேந்தர்ன்னு சொல்லணுமா)கொடுத்து விட்டார் என்று காறித்துப்புவோமா இல்லையா?

இப்படி நான்கு பேர் நம்மைக் கேவலமாகவும் இழிவாகவும் பேசுவார்கள் என்பதை அறிந்து தான் தனது சாதிக்காக கட்சி நடத்தும் பச்சமுத்துவே தனது சாதிக்காரன் எவனுக்கும் விருது கொடுக்கவில்லை.விருது கொடுக்குமாறு தேர்வுக்கமிட்டிக்கு கண்ணசைவு கூட கொடுக்கவில்லை போலும்.

பொதுவாக லாப நோக்குள்ள ஊடக வியாபாரத்தில் இப்படி ஒரு ”முற்போக்கு” அல்லது ”நடுநிலை” தேவைப்படுகிறது.

ஆனால் பச்சமுத்துவிடம் இருக்கும் ”முற்போக்கு” அல்லது ”நடுநிலை”  தேர்வுக்கமிட்டிக்கு இல்லை.அது கடுமையான சாதி வெறியுடன் இயங்கியுள்ளது என்பதை தான் விருதுப்பட்டியல் சொல்கிறது.

3)அனைத்துத் துறைகளிலும் விருதினைக் கொடுத்தவர்கள் ஏன் சமூகத்தின் முக்கியமான ஊடகத்துறையில் கொடுக்கவில்லை?யாருக்குக் கொடுத்தாலும் மீதம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து நம் டவுசரைக் கழட்டி விடுவார்கள் என்ற அர்த்தமுள்ள பயமா?

4)அனைத்து விருதிலும் அபத்தம் உள்ளது.எடுத்துக் காட்டாய் ஒரு அபத்தம் பற்றிச் சொல்ல விரும்புகிறோம்.

அறிவியல் பிரிவில் எம்.எஸ்.சுவாமிநாதன்(அதாங்க நம்ம மான்கொம்பு சாம்பசிவன் மகன் சுவாமிநாதன்) என்பவருக்கு சாதனைத் தமிழர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியலில் ஒரு பிரிவான விவசாயத்தைச் சேர்ந்தவர்.

சரி போய்த் தொலையட்டும்.

அவரது பாழாய்ப்போன அறிவியலால் எத்தனை லட்சம் விளைநிலங்கள் மலடாய்ப்போய் விட்டது என்பதையோ,எத்தனை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து விட்டார்கள் என்பதையோ நாம் இங்கு சொல்லப் போவதில்லை.

ஏனென்றால் எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவியல் நாட்டை தொலைதூரத்திற்கு முன்னேற்றி விட்டது என்பது தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புடலங்காய் கொள்கையாக இருக்கலாம்.

அதனை சரி என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் நம்பிக்கை நட்சத்திரமாக அவரது கொள்கை உடைய ஒருவரைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆனால் அதே நேரம் இத்துறையில் இவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக முன் வைத்துள்ள ரேவதி, எம்.எஸ்.சுவாமிநாதனின் கொள்கையை கடுமையாக விமர்சிப்பவர்,அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்னும் கொள்கை உடையவர் என்பதெல்லாம் விருதுக்கமிட்டி அறிவாளிகளுக்குத் தெரியாதா..?

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதனுடன் முரண்பட்டிருக்கும் ரேவதி அவருக்கு அடுத்த நிலையில் எப்படி இடம்பெற முடியும்.?

ரேவதியின் தேர்வு சரியானதென்றால் மான்கொம்பு சாமிநாதன் மகன் சுவாமிநாதனுக்குப் பதில் ரேவதியின் குரு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தானே இடம் பெற்றிருக்க வேண்டும்?


                                         இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

(கொசுறு-அப்படியானால் புதிய தலைமுறை சேனலில் அப்பப்ப பிட் மேட்டர் கொடுக்க மட்டும் தான் நம்மாழ்வாரா..?)

என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரியலை..!

5) சமூக சேவை: நம்பிக்கை நட்சத்திரம் – முரளிதரன்(சேவாலயா தொண்டு நிறுவனம்) என்பவருக்கும் விருது.சேவாலயா நிறுவனம் அப்பழுக்கற்ற ஒரு நிறுவனம் என்பது உங்களுக்கு நன்கு தெரியுமா?அதை உறுதிப் படுத்தி விட்டீர்களா?

5)ஜெயகாந்தன் விருது விஷயத்தில் நிறைய பஞ்சாயத்து இருக்கிறது.

தமிழ் ஒரு நீச பாஷை என்று சொல்லியவர் ஜெயகாந்தன்.அப்படியானால் சமஸ்கிருதத்தில் தான் நீ பேச வேண்டும் என்று கோவையில் விஜயா பதிப்பகம் ஏற்பாடு செய்த மேடையில் செருப்படி வாங்கப்போனவர்.தனனைத் தமிழன் என்றே ஒத்துக் கொள்ளாதவர்.

அவருக்கும் தமிழன் விருது. சரி போய்த் தொலையட்டும்.

அடுத்த பஞ்சாயத்து.

20 ஆண்டுகளுக்கு முன்னால்,பெண் எழுத்தாளர்கள் எல்லோரும் பத்திரிகை ஆசிரியர்களை ”அட்ஜஸ்ட்” செய்து தான் தொடர்கதை சிறுகதை எழுதுகிறார்கள் என்று உளறிக் கொட்டியவர் ஜெயகாந்தன்.

அதற்கு சிவசங்கரி,கீதாபென்னட்,இந்துமதி, போன்றோர் கண்டனக்குரல் எழுப்பியிருந்தனர்.

இப்பொழுது அதே சிவசங்கரி கையால்வாங்கியிருக்கிறார் ஜெயகாந்தன்.

என்ன கருமமோ? இலக்கிய வியாதிகள் லட்சணம் இப்படித்தான் போலும்.

6)இலக்கியத்தில் சாதனைத் தமிழர் லட்சணம் இப்படி இருக்க,நம்பிக்கை நட்சத்திரத்தின் வண்டவாளத்தைப் பார்ப்போம்.


வெங்கடேசன் சார்..சாகித்ய அகாடமி விருது கஷடப்பட்டு டெல்லியில ஆளப் பிடிச்சு வாங்குனீங்க.ஆனா இந்த விருது இலகுவா (இலக்கிய சொல்லாடல் சரியாப்பா..) பட் செலவில்லாம கிடைச்சுடுச்சு இல்லையா சார்.இப்ப சந்தோஷம் தானே..?

காப்பிக்”க்கோட்டம் புகழ் சு.வெங்கடேசனின் களவுக்கோட்டம் என்னும் ஆயிரம் பக்க நாவல் பலரிடம் திருடியும்,ஆங்கிலத்தில் இருந்து அடுத்தவர் உழைப்பில் மொழிபெயர்த்தும் கட்டப்பட்டது என்று ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கிறது.(மதுரையில் சிபிஎம் காரங்களே இவர் மீது செமக் காண்டுல இருக்காங்களாம்.)இவருக்குத் தான் நம்பிக்கை நட்சத்திரம் விருது என்றால் தமிழ் இலக்கியத்தின் வருங்காலத்தை நினைத்து வாயால் சிரிக்க முடியவில்லை.

7)அடுத்ததாக வேணு சீனிவாசன்

தேர்வுக்குழுவினரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் வேண்டுமானால் வேணு சீனிவாசன் (டிவிஎஸ் குழுமம்) மிகப்பெரிய நிர்வாகியாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது பேராண்டி...இப்ப எத்தனையோ சாதனைத் தமிழர் புதுசு புதுசா வந்துட்டான்.

ஆனா நீ (யாரு நம்ம அம்பி சீனிதான்)இன்னும் மும்பைக்கு வேலை தேடி சென்னையிலிருந்து கிளம்பிப் போன பழைய கால நெனப்புலயே இருக்க பேராண்டி..!அதான் தேடிப்பிடிச்சு விருது கொடுத்துருக்க.

இது புதிய தலைமுறை விருதா..!முதிய தலைமுறை விருதா..!

8)விருதுப் பட்டியலில் நாங்கள் சினிமாவையோ,அரசியல் துறையையோ பரிசீலிக்கவில்லை என்று ஆயிரத்தெட்டு தடவை அறிவிப்பு வேறு.

ஆனால் சாதனைத் தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் தானே..!சினிமாப் பாட்டுக்குத் தானே இசையமைத்துள்ளார்.அவருக்கும் விருது.அப்புறம் எதுக்கு அறிவிப்பு?அது கிடக்கட்டும் குப்பையில.

இன்னும் இப்படி எத்தனையோ எழுதலாம்.உங்களின் எங்களின் பொன்னான நேரம் தான் வீணாகும்.

புதிய தலைமுறையின் விருதுகள் குறித்து ஒரே வார்த்தையில் சொன்னால்,குப்பை.

நாட்டில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு உருப்படியாய் எத்தனையோ வேலை இருக்க நமக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு சீனி?(சீனிவாசன் தான் செய்திப்பிரிவுக்கு இயக்குனர்.)என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்டிக்கியே ..யார் உனக்கு இப்படி ஐடியா கொடுத்தது ராசா..?உன்ன எப்படித் திருத்தறதுன்னு தெரியலையேப்பா எங்களுக்கு..!



பொதுவாக விருதுகளின் லட்சணம்...!




(சாப்ளின் சார் இந்த விருது அநியாயத்தை நிறுத்தவே முடியாதா..?)


  • மெரிக்காவில் ஒருமுறை சார்லி சாப்ளின் போல வேடம் அணிந்தவர்களுக்கான போட்டி ந்டைபெற்றது.அதில் யாருக்கும் தெரியாமல் சார்லி சாப்ளினே கலந்து கொண்டார்.ஆனால் அவருக்குக் கிடைத்ததோ மூன்றாம் பரிசு தான்.
  • தமிழகத்தில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் பாரதியார் கலந்து கொண்டார்.அதில் அவருக்கு கிடைத்தது இரண்டாம் பரிசு.அவர் எழுதிய கவிதை என்ன தெரியுமா? செந்தமிழ் நாடென்னும் போதினிலே...அந்தக் கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கவிஞர் யாரென்று இன்று வரை யாருக்கும் தெரியாது.

இதற்கு மேல் விருதுகளின் லட்சணத்தைச் சொல்லவும் வேண்டுமோ..?





3 comments:

Jey said...

நடுனிலையா சானல் நடத்துராய்ங்கன்னு ஊருக்குள்ள கொல்லபேரு சொன்னாய்ங்கலே!!!!!!!!,

பயபுள்ளக பொய் சொல்லிட்டானுகளா!!!???.

பி.கு.- பிளாக்கர் அண்ணே இந்த word verification கர்மத்த தூக்கிவிட்ருங்க, பின்னூட்டம் போட குஷ்டமா இருக்கு.

Anand said...

நல்ல விளாசல்.

Anonymous said...

super sir.