Sunday 1 April 2012

ராஜா கைய வச்சா அது ராங்கா போகுதுல்ல…..




வெறுங்குடம் ராஜா பத்தி தொடர்ந்து எழுத பதிவுகள் நிறைய இருந்தாலும் ஓரிரு செய்திகளை இன்று பதிவு செய்கிறோம்.


ப்பொழுது தினகரன் நிர்வாகம் கைமாறிய நேரம். ராஜா தினகரன் அலுவலகத்தில் பந்தாவாக (வெட்டி பந்தா தான்...) அமர்ந்திருக்கிறார்.

அப்பொழுது தினகரன் ஆசிரியராக குணசேகரன் ( மலையாள இனவெறியர் பிரேம்சங்கரின் நண்பர் குணசேகரன் அல்ல) இருந்தார். அவரின் அருகில் பெரிய மேஜை போட்டு ராசா அமர்ந்திருந்தார்.

எடிட்டோரியல் பற்றி வெறுங்குடத்திற்கு ஒரு அறிவும் இல்லையென்றாலும் அவ்வப்போது ஏதாவது ஐடியா சொல்லித் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வார். அங்கிருக்கும் உதவி ஆசிரியர்களும் வேறு வழியின்றி மனதுக்குள் திட்டிக் கொண்டே அவரை சகித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் ராஜா சொல்லிக் கொண்டிருந்தது இது,”இனிமேல் கலைஞர் கூறினார்,என்று கூறி முழுக்க முழுக்க அவர் சொன்னதையெல்லாம் அப்படியே பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை.அந்தக் காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு.கருணாநிதி சொன்னார் அப்படின்னு ஒரு லிமிட்டா செய்தி போட்டா போதும்.”.கலைஞர் இதப் பத்திக் கேட்டார்ன்னா ராஜா சொன்னாருன்னு சொல்லுங்க, மிச்சத்த நான் பாத்துக்குறேன் அப்படின்னு தெனாவெட்டாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

குணசேகரனும் அவர் சொன்னதை அப்படியே ஆமோதித்துக் கொண்டு, நீங்க சொன்ன மாதிரிதான் இப்ப நடந்துக்கிட்டிருக்குன்னு சொல்லிக் கிட்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து, சரியாக ஒரு போன் வந்தது. போனை எடுத்த குணசேகரன், மிகவும் பவ்யமாகப் பேசிவிட்டு ’சரிங்கய்யா,சரிங்கய்யா’ என்று சொல்லிவிட்டு,ஒரு நிமிஷம் ஐயா’ ன்னு சொல்லி போனை வெறுங்குடத்திடம் கொடுத்தார்.

போனை வாங்கிய வெறுங்குடம், ரிசீவரை மூடிக்கொண்டு, சைகையில் யார், யார் என்று கிசுகிசுப்பாகக் கேட்டார். குணசேகரன், பெயரைச் சொன்னவுடன், அவ்வளவு நேரம் ஆட்டம் காட்டிய ராசாவுக்கு உடம்பே நடுங்கிப்போனது.

இருந்தாலும் என்ன செய்ய? அந்த அழைப்பில் பேசியாக வேண்டும் அல்லவா? உடனே, ரிசீவரை பயத்துடன் வாங்கிய ராசா, எதிர்முனையில் இருந்து என்னவெல்லாம் வந்து விழுந்ததோ தெரியவில்லை, எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். ‘சரிங்கய்யா,சரிங்கய்யா,சரிங்கயா” என்பதைத் தவிர, ராசாவுக்கு வேறு வார்த்தைகளே வரவில்லை. நீங்க சொன்ன படியே பண்றேங்கய்யா அப்படின்னு சொல்லி போனை மெதுவாக வைத்தார்.

போனில் பேசியவர், (நாரசாரமாய்த் திட்டியவர்..?)வேறு யாரும் அல்ல, கருணாநிதிதான். ’கலைஞர் பேசினா நான் பாத்துக்குறேன்’ என்று தெனாவெட்டாகப் பேசிய ராஜா, போனில் மிகவும் பம்முவதைக் கண்டு தினகரன் ஊழியர்கள், நமுட்டுச் சிரிப்புடன் இந்தாளுக்கு இது தேவையா? ன்னு நகைத்தனர்.

 ராசாவின் முகம் எப்படி இருந்திருக்கும்? வாசகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று ராஜாவுக்காகத்தான் அண்ணா சொல்லியிருப்பாரோ!







வெறுங்குடம் பற்றி இன்னொரு செய்தி...

சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தாட்கோ சார்பில், விமான பணிப்பெண்களுக்கான பயிற்சி தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் வெறுங்குடத்தின் மனைவி.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைத்து ஊடகங்களுக்கும் கவர் கைமாறியது. சூரிய  தொலைக்காட்சியின் ஆனந்தமான ஒரு நிருபரின் முறை வந்தது. மக்கள் தொடர்பு அதிகாரியோ, அவரின் கையிலும் ஒரு கவரைக் கொடுத்து, ‘ரொம்ப நன்றி நல்லா கவர் பண்ணுங்க” என்று சொன்னார்.

ஆனந்தமான செய்தியாளரோ,(ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டர் ஆனந்த் என்று நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது..) ‘நாங்க நல்லா கவர் பண்ணனும்னா நீங்க எங்களை நல்லா கவர் பண்ணனும்’ என்று அர்த்தபுஷ்டியுடன் கூறினார்.

மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி திகில் அடித்தவர்போல நிற்க, அந்த நிருபரோ, ’நாங்க யார் தெரியுமா,?எல்லோருக்கும் போல தான் எங்களுக்குமா? ரொம்பப் பெரிய டிவி, எங்களுக்கு எல்லோரையும் விட ஸ்பெஷலா கவனிக்கவேண்டும்’ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதிர்ச்சியாகிப்போன ம,தொ.அதிகாரியோ, நம்ம(!) டிவியில வேலைபார்த்துக்கொண்டே எல்லார் முன்னாலும் இவர் இப்படிக் கேட்கிறாரே’ என்று வேறு வழியில்லாமல் மீட்டருக்கு மேல் போட்டு, (அதாவது ரு.500) கவர் கொடுத்து இருக்கிறார்.

ஆனந்தமான நிருபர் ரொம்பவும் ஆனந்தமாக கவரை வாங்கிக்கொண்டு அலுவலகம் வந்துசேர்ந்தார். அவர் வந்து சேருவதற்குள், மனைவியிடம் தொலைபேசியில் தகவல் வந்துவிட்டது. அந்த நிருபரை உடனே தன்னை வந்துபார்க்கச் சொன்னார், ராசா.

எதுக்கு இந்த ஆளு, நம்மளக் கூப்பிடுறான் என சலித்துக்கொண்டாலும், அடுத்த நிமிடமே, வெறுங்குடத்தின் முன்பு அந்த நிருபர் ஆஜர் ஆனார்.

வெறுங்குடம், நிருபரிடம், ’இப்ப கவர் வாங்கிட்டு வந்தியே, அவங்க யார் தெரியுமா?’’ என்று கேட்க, நிருபரோ தெரியாது என்றிருக்கிறார்.

’அவர் என் மனைவி’ என்று மந்தகாசப் புன்னகையுடன் ராஜா சொல்ல, நிருபர் வெலவெலத்துப் போனார்.

நம்ம வேலை அம்புட்டுத் தானா?என்று மனதுக்குள் எண்ணம் ஓடியது.

ராஜாவோ, ரொம்ப சிம்பிளாக, ‘’ அவங்க எதுக்கு வருத்தப்பட்டாங்கன்னா,நம்ம டிவி எம்புட்டு பெரிய டிவி, இம்புட்டு குறையா கவர் கேட்குறார்ன்னு தான். என்று எகத்தாளத்துடனும் நக்கலுடனும் சொல்லி விட்டு இனியாவது நிறைய கேளு..என்ன? என்று அழுத்தமாகச் சொல்ல, தப்பித்தோம் பிழைத்தோம் என இடத்தை காலி செய்தார், ஆனந்தம்.




இப்படித்தாங்க நம்ம ராஜா..! எப்ப எப்படி நடப்பாருன்னு யாருக்கும் தெரியாது...






அடுத்து ஒரு சம்பவம்....


சூரியக் கதிர் தொலைக்காட்சிக்கு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு...

தொலைபேசியை எடுத்த ஒரு பணியாளர், யாரு பேசுறது என்று இரவுநேர உறக்கம் கலைந்த கடுப்பில் கேட்டார்.

 ’’நான் தான் .......பேசுறேன்’’ என்று கரகரத்த குரலில் சொல்லியிருக்கிறார், ஒரு தலைவர்.

‘’ சொல்லுங்க..’’

’’ நீங்க பேசுறது யார் தெரிஞ்சுக்கலாமா..?’’ தலைவர் பவ்யமாகக் கேட்கிறார்.

’’நான் கோ ஆர்டினேட்டர் பேசுறேன்.’’

’’அப்படின்னா...தமிழ்ல அதுக்கு பேர் என்ன?’’ என்று நக்கல் கலந்த தொனியுடன் கேட்டது எதிர் முனை.

அதே தூக்கக் கலக்கத்துடன், தொலைக்காட்சிப் பணியாளரும், ’’ஒருங்கிணைப்பாளர்ங்க...’’

’’ ம்ம்.என்ன பேர் சொன்னீங்க...?’’

ஒருங்கினைப்ப்பாளருக்கு எதிரில் பேசும் தலைவர் யார் என்று இன்னும் தெளிவு வரவில்லை. தன்னுடைய பேரைச் சொன்னார்.

’’ ம்ம்...அந்த ராஜா இருக்கானா?’’

’’இல்லைங்க..’’

‘’எப்ப வருவான்..?’’

’’நாளைக்கு வருவாருங்க...’’

’’நீங்க அவரைப் பார்ப்பீங்களா?”.

‘’இல்லைங்க நான் பாக்க மாட்டேன்..’’

‘’ஏன்?’’

’’எனக்கு நைட் ஷிப்ட்...நான் அவரைப் பார்க்க முடியாது..’’

‘’எப்பதான் சார் பார்ப்பீங்க?”..

‘’நெக்ஸ்ட் வீக் எனக்கு மார்னிங் ஷிப்ட்...அப்பதான் பார்ப்பேன் சார்

’’ம்.அப்ப பார்த்தீங்கன்னா எனக்காக ஒன்னு பண்றீங்களா.’’
.
’’சொல்லுங்க சார் ’’

’’அந்த ராஜா பயலை செருப்பைக் கழட்டி அடி. எதுக்கு என்னை அடிக்கிறன்னு அவன் உன்னைக் கேட்டான்னா...கருணாநிதிங்கிறவன் தான் உன்னை அடிக்கச் சொன்னான்னு சொல்லிடு

என்றதோடு, மறுமுனையில் டொக் என்ற சத்தம்தான் கேட்டது.

அப்போதுதான், ஒருங்கிணைப்பாளருக்கு தூக்கமே கலைந்தது.  


No comments: