கவிதா முரளிதரன் |
ஏறத்தாழ ஒரு வருடங்களுக்கும் மேலாக 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு ஆசிரியர் இல்லாமல் இருந்து வந்த நிலையில் புதிய ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நாம் ஏற்கனவே சொன்னபடி அந்தப்பதவிக்கு முயற்சித்த கவிதா முரளிதரன் தான் ஆசிரியர். இவர் இதற்கு முன் நியூஸ் டுடே,இந்தியா டுடே,The Week,Deccan chronicle.ஆகிய பத்திரிகையில் வேலை பார்த்தவர்.
இவர் இப்பொழுது 'தி இந்து' தினசரி நாளிதழில் (C.O.B) ஆக வேலை பார்த்து வருகிறார். தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டார்.இந்த மாத இறுதியில் அங்கிருந்து விலகி,இந்தியா டுடேயில் வேலைக்குச் சேர இருக்கிறார்.
'தி இந்து' தினசரி நாளிதழை ஒப்பிடும் பொழுது இந்தியா டுடே வார இதழில் வேலைப் பளுவும்,நெருக்கடியும் குறைவு என்பதும்,ஊதியம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'தி இந்து' நாளிதழில் வேலைக்குச் சேரும் பொழுது பேசிய படி ஊதியம் அளிக்கவில்லை என்பதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் யார் வந்தாலும் அந்த நிறுவனம் தனது வழக்கமான இந்துத்துவ,ஆபாசத்திற்கு கடை விரிக்கும் பாலிசியை மாற்றாது என்பது மட்டும் நிச்சயம்...!
நாமும் நமது எதிர்ப்புக்குரலைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்போம்.
4 comments:
இப்படித்தான் சுகிதா கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து விலகுகிறார் என்று சொன்னீர்கள்.ஆனால் அவர் விலகாதது மட்டுமல்ல கலகக்குரலை திட்டியும் முகநூலில் பதிவிட்டார்.அதற்கு கவிதா முரளிதரனும் லைக் செய்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.இப்ப கவிதா மேடம் பத்தி பதிவு.இப்ப யார் திட்டப் போறாங்களோ...
சுகிதா கலைஞர் தொலைக்காட்சிக்கு பதவி விலகல் கடிதம் கொடுத்தது போல கொடுத்தது நிஜம்.அதன் பின் டாயல் நிர்வாகத்தில் பேசுவது போல் பேசி சம்பள உயர்வு வாங்கிக் கொடுத்ததும் நிஜம். அது திட்டமிட்ட நாடகச் செயல்பாடா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.நமது தகவல் தவறானதல்ல. நம்மை விமர்சித்து அவர் எழுதிய பதிவுக்கு கவிதா முரளிதரன் விருப்பம் தெரிவித்தார் என்பதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல..? இந்தப்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.
வெங்கடேஸ்வரன் ஆட்டம் - கவிதா முரளீதரன் ஓட்டம் அண்மைக்காலமாக தி இந்து நாளிதழில் பாலிடிக்ஸ் ஓவராகிவிட்டது. தினமும் மதியம் வேலைக்கு வந்துவிட்டு மாலைவாக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த கவிதா முரளீதரன், வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாமலே வேலை பார்த்துக் கொண்டிருந்தா்ர். அவரது இயலாமையை பயன்படுத்தி அவரை விவரமாக ஓரங்கட்டி ராஜினாமா செய்ய வைத்து வி்டடார் வெங்கடேஸ்வரன். இவரது இம்சை தாங்க முடியாமல் இந்தியா டுடேவுக்கு தாவி விட்டார் கவிதா முரளீதரன். (இந்தியா டுடேயை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையாப்பா..) தி. இந்துவில் வெங்கடேஸ்வரன் - ரவீந்திரன் ஆட்டம் தாங்கமுடியவில்லை. ஒவ்வொருவரையும் ஓரங்கட்டிவிட்டு அந்த இடத்தில் தினகரனில் உள்ள தன் நண்பர்களை .கொண்டுவருவதுதான் அவரது மாஸ்டர் பிளானாம். ஆனால், வெங்கடேஸ்வரன் ஆட்டத்தை இந்துவின் ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் கவனமாக பார்த்து வருகிறது என்கிறார் அங்குள்ள தொழிற்சங்க பிரமுகர் ஒருவர். தி இந்துவை மற்றுமொரு தினகரனாக்குவதை நிர்வாகம் ரசிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெங்கடேஸ்வரனை கன்ட்ரோல் பண்ணாமல் இருக்கும் அசோகன் மீதும் நிர்வாகம் எரிச்சல் அடைந்திருக்கிறது. விரைவில் வெங்கடேஸ்வரன் - ரவிந்திரன் இணைக்கு ஆப்பு வைக்கப்படலாம் என்கிறார் அவர். ஒருவேளை அசோகன் மீதும் அம்பு பாயலாம். டெய்ல் பீஸ் - தான் ராஜினாமா செய்த அன்று, தி இந்து சேர்மன் ராம் அவர்களை கவிதா முரளீதரன் தனியாக சந்தித்து, தமிழ் இந்துவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துள்ளார். விரைவில் கிளைமாக்ஸ் அரங்கேறும். அன்புடன், சோழராஜன்
ஹிந்து ஊடகத்தில் கவிதா சரியா செயல்படலை என்பதுதான் உண்மை.மொத்தம் 29 செய்தியாளர்களை நிர்வகிக்கும் திறன் அவரிடம் இல்லை.அதனால தான் கொடுத்த சம்பளம் போதுமுன்னு இந்தியா டுடேவில வேலைக்கு போய்ட்டாங்க பாஸ். அங்க ஒரு வேலையும் இல்லைன்னு உமக்கும் தெரியும்.
Post a Comment