இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் டெஸ்க் ஒர்க்காக மாறியது போய் இப்பொழுது ஜோதிடம் சொல்வதில் வந்து நிற்கிறது.அடுத்தது நாடி ஜோதிடம்,கிளி ஜோதிடம் என வரிசையாக சீனிவாசன் நடத்தும் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினர் சொல்வார்கள் என நினைக்கிறோம்.
ஆனால் எந்த ஜோசியர் வந்தாலும் சரி,ஜூனியர் விகடனின் எலிகள் வந்து சொன்னாலும் சரி,ஒரே கருத்தைத் தான் சொல்லப் போகிறார்கள்.
அது நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார் என்பதே.
ஜோசியத்தை ஆராய்ந்து அம்பலப்படுத்துவதற்குப் பதில் அவர்களிடம் மேட்டர் வாங்கி பக்கங்களை நிரப்பியிருக்கிறார்கள்.
'தமிழ் மக்களின் நாடித்துடிப்பு' என்று வைத்துக்கொண்டு ஜோசியக்காரனிடம் குறி கேட்டு வெளியிடும் நிலையில் ஜூனியர் விகடன் வந்திருக்கிறது.
இந்தப் பிழைப்புக்கு
ஜூவி முதலாளி சீனிவாசனும்,அதன் ஆசிரியரும் தங்கள் நிருபர் பரிவாரங்களுடன் அண்ணா சாலையில் ஜோசியம் பார்க்கலாம்.
பத்திரிகைத் தொழிலாவது பிழைக்கும்.
****
![]() |
நக்கீரன் கோபால் |
ஜூனியர் விகடன் ஜோசியக்காரர்களின் கருத்தை வாங்கிப் போடுகிறது என்றால் 'திராவிடப்' பாரம்பரியம் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நக்கீரனோ சித்தர் வாக்கு என்கிறது.
மோடிக்கு எதிர் நிலையை தன் கட்சித்தலைவர் இப்பொழுதைக்கு எடுத்திருப்பதால் அவரை ஆதரிக்க முடியாது. ஜெயலலிதாவை எப்பொழுதும் ஆதரிக்க முடியாது. ஆக அவரைத் தவிர்த்து யாரையாவது பிரதமராய் வழி மொழிய வேண்டும்.
பெண் என்று சொல்லி விட்டதால் கருணாநிதி குடும்பத்து பெண்ணான கனிமொழியை வழிமொழிய முடியாது. 'தளபதி' கோபித்துக் கொள்வார்.இப்பொழுது இருக்கும் இடைவெளி இன்னும் அதிகமாகும்.
எதுக்கடா பிரச்சனை என்று சுஷ்மா சுவராஜ்,பிரியங்கா போன்றோருக்கு பிரதமர் வாய்ப்பு என்று எழுதி விட்டது.
பிழைப்பதற்கு பத்திரிகை தொழில் இல்லாவிட்டாலும் நக்கீரன் கோபாலுக்கு கைவசம் தொழில் இருக்கிறது.பில்லி சூனியம்,தாயத்து,ஜோதிடம்,செய்வினை போன்றவற்றில் கோபால் நம்பிக்கை உள்ளவர் தான்.இதற்கென பத்திரிகை நடத்தி வருபவரும் தான்.
ஆகையால் கவலை இல்லை.அதன் பொறுப்பாசிரியர் காமராஜ் நிலை தான் கொஞ்சம் கஷ்டம்.வேறு தொழில் தேட வேண்டும்.
நல்லாத் தான் பண்றீங்க புலனாய்வு...!
No comments:
Post a Comment