Sunday, 25 August 2013

ஏ.டி.எம்.மில் திருடிய தினகரன் நியூஸ் எடிட்டர்.....!



தினகரன் நாளிதழின் வேலூர் பதிப்பின் நியூஸ் எடிட்டராக சில வாரங்களுக்கு முன்பு பெருமாள் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.(பெருமாள் புகைப்படம் நம்மிடம் இல்லை.யாரிடமும் இருந்தால் அனுப்பவும்.)இதற்கு முன்பு பொறுப்பில் இருந்த கோவிந்தராஜ் திரும்பவும் சென்னைப் பதிப்பிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த பெருமாள் திடீரென்று நியூஸ் எடிட்டராக நியமிக்கப்பட்டிருப்பது அங்குள்ள மேனேஜர் மற்றும் நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி நடந்துள்ளது என்பதுவும்,அது அவர்களை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

இனி இவர் குறித்த சிறு பதிவு.

இவர் யாரென்றால் அதிகமாய் கவர் வாங்குகிறார் என்று தினத்தந்தியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டவர்.(அங்கு இருப்பவ‌ர்களே இவரின் வேகத்தைக் கண்டு மிரண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இப்பொழுது தினகரனின் வேலூர் பதிப்பு எடிட்டர்.

என்ன நோக்கத்திற்காய் இவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதனைக் கச்சிதமாய் நிறைவேற்ற வேண்டாமா?

அலுவலகத்தில் நிறைவேற்றினாரா என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் பொதுவெளியில் கச்சிதமாய் நிறைவேற்றித் தன் 'திறமை'யை நிரூபித்து விட்டார்.

ஆனால் அதில் அவரின் கீழ் பணியாற்றும் பத்திரிகையாளர் சிக்கிக் கொண்டது தான் சோகம்.

இனி செய்திக்கு வருவோம்.

வேலூர் தினகரன் அலுவலகத்தின் அருகே ஒரு தனியார் ஏ.டி.எம்.மையம்.

ஒரு மதிய வேளையில் தினகரன் ரிப்போர்ட்டர் ஒருவர் பணம் எடுக்க உள்ளே நுழைகிறார்.அவர் பெயர் தாஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.இவர் பழைய தினகரனில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருபவர்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளிவரும் சமயம் வெளியே நியூஸ் எடிட்டர் பெருமாள் பணம் எடுக்கக் காத்திருப்பதைத் தற்செயலாய்ப்  பார்த்து விடுகிறார்.அவரைக் கண்டதும் ரிப்போர்ட்டர் தாசிடம் இருக்கும் அடிமை மனோபாவம்  தானாய் விழிக்கிறது.பதைபதைத்து விடுகிறார்.

எடிட்டர் வெளியே காத்திருக்கிறார்.நாம் அவரைக் காக்க வைத்திருக்கிறோம்,இது ரொம்ப தவறல்லவா..? (!)என்ற பயத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பணத்தைக் கூட எடுக்காமல் அரக்கப் பரக்க வெளியே வருகிறார்.பணம் அப்படியே இயந்திரத்தில் இருக்கிறது.

'சார் நீங்க போங்க சார் உள்ளே" என்று வழி விடுகிறார்.

இவரின் பதைபதைப்பைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டு அதனை வெளிக்காட்டாத பெருமாள் ஏ.டி.எம். மையம் சென்று அவர் வந்த வேலையை முடித்து விட்டுச் செல்கிறார்.பெருமாள் செல்லும் வரை ஏ.டி.எம்.மையத்திற்கு வெளியே கொஞ்சம்  தள்ளி நின்று காத்திருந்த தாஸ்,  அவர் சென்ற அடுத்த நொடி,தான் எடுக்காமல் விட்டு வந்த பணத்தை எடுக்க உள்ளே நுழைகிறார்.

ஆனால் அங்கு பணம் இல்லை.

அதிர்ச்சியாகிறார்.சிலையாய் நிற்கிறார்.என்னடா இது சோதனை?

மாசக் கடைசி வேற...எவனிடமும் கடனும் வாங்கவும் முடியாது.என்ன செய்வது என்று யோசிக்கிறார்.

நம்ம எடிட்டர் தான் இதற்கு முன் வந்தார்.அவர் ஏதாவது.?

ஆனாலும் அதிகம் யோசிக்க முடியவில்லை.

பெருமாள்



எடிட்டர் முதலாளியைப் போல கேடி தான்.ஆனால் 5000 ரூபாய் என்பது அவரைப் பொறுத்து அல்பக் காசு,அதைத் திருடுவாரா என்று யோசித்து உடனே அவராகவே அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று ஒருவாறாய் முடிவு செய்து கொள்கிறார்.

ஒருவேளை பணம் நாம் எடுக்காததனால் அது திரும்ப,இயந்திரத்தின்  உள்ளே(!) சென்றிருக்குமோ,அல்ல‌து எடிட்டர் உள்ளே இருக்கும் பொழுதே, நம் கவனத்திற்கு வராமல் பணம் எடுக்க வந்த இன்னொருவன் ந‌ம் பணத்தையும் சுட்டிருப்பானோ என்று யோசித்து இறுதியில் வேறு வழியில்லை என்று முடிவு செய்து வங்கியில் புகார் செய்கிறார்.

இவர் ரிப்போர்ட்டர் என்பதால் வங்கி உடனே நடவடிக்கை எடுக்கிற‌து.சில மணி நேரத்திலேயே,ஏடி எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள காமெரா பதிவுகளை எடுத்துப் பார்க்கிற‌து.அதில் அனைத்தும் பதிவாகி இருந்தது.தாஸூம் உடன் இருக்கிறார்.

அதில்....

தாஸ் எடிட்டரைப் பார்த்தவுடன் வெளியே வருகிறார்.
உள்ளே செல்லும் எடிட்டர் பெருமாள்,முதல் வேலையாய் அங்கு எடுக்கப் படாமல் இருக்கும் தாஸின் பணத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் எடுத்து பாக்கெட்டில் திணிக்கிறார்.அதன் பின் தான் தனது கார்டை உள்ளே நுழைக்கிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. ஆனால் அதிக அதிர்ச்சி அடைந்தது ரிப்போர்ட்டர் தாஸூ.

"ச்சே இவ்வளவு கேவலமா இருக்கானே",எச்சக்காரப் பய,தனக்குக் கீழ வேலை செய்யுறவன் பண‌ம் என்று தெரிந்தும் இப்படிச் செய்துட்டானே..?பகலிலேயே திருடுறானே,மொள்ளமாரிப்பய என்பது போன்ற இன்னும் பல 'நாகரீக‌' வார்த்தைகளைச் சேர்த்துத் திட்டுகிறார்.வங்கி நிர்வாகத்திற்கு இந்தக் கதை எதும் புரியவில்லை.நகரக் காவல்துரைக்கு புகார் அளிக்க முடிவு செய்கிறது.
ஆனால் தாஸ் தடுத்து விடுகிறார்.

"இவன் எங்க எடிட்டர் சார்."என்று அவமானத்துடன் சொல்கிறார்.

அவர்களுக்கும் அதிர்ச்சி.

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் போன்ற ஊழல் பேர்வழிகளைக் கண்ட அவர்கள்,மேலதிகாரின்னா இப்படித்தான் இருப்பானுஙகளோ என்று சிரித்துக் கொள்கின்றனர்.

அதன் பின் பஞ்சாயத்து கூட்டப்படுகிற‌து.பல கெடுபிடிகளுக்குப் பின் வங்கிக்கு வருகிறார்.நம்ம பெருமாள்.

முதலில் தான் எடுக்கவில்லை என்றும்,தான் யார் தெரியுமா என்னைச் சந்தேகப்ப‌டலாமா?என்றும் சவடால் விட்டவர் வீடியோ பதிவுகளைக் காட்டியதும்,அமைதியானார்.பிறகு,என் பணம் என்று தான் தவறாய் எடுத்து விட்டேன் என்றும் அபத்தமாய் காரணம் சொன்னார்.

அதன்பின்,"சார் அவர் பணத்தை உடனே கொடுத்துடுங்க,புகாரை முடித்து விடலாம்" என்று வங்கி நிர்வாகம் சொல்கிறது.

அதற்கு எடிட்டரோ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்,பணம் இப்பொழுது என்கிட்ட இல்லை.இரண்டு தவணையாகத் தந்துடுறேன் என்று சொன்னார்.வங்கி நிர்வாகம் தாஸ் முகத்தைப் பார்க்க,தாஸ் இந்தப் பாவி,அலுவலகத்தில் நம்மை எதும் காலி பண்ணிடுவானோ என்று பிழைப்பை யோசித்து பெருமாள் சார் சொன்ன மாதிரி,நான் வாங்கிக்கிறேன் சார்.புகாரை முடிச்சுடுங்க என்று சொல்லித் 'தலைவிதி'யை நொந்தபடி  விடை கொடுத்தார்.

'கிரேட்' பெருமாளோ எதுவும் நடைபெறாதது போல எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு தினகரன் அலுவலக்ம் சென்று சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய‌ தனது பணிகளைத் தொடர்ந்தார்.

த்திரிகையாளர்களின் அடிமை மனோபாவம் குறித்து ஆராய்வதா,இல்லை எடிட்டரின் திருட்டுத்தனம் குறித்து பேசுவதா,இல்லை இவர்களைப் போன்றவர்களை மட்டும் ஏன் நிர்வாகம் விரும்புகிறது என்பது குறித்தோ,இங்கு பேசுவதை விட ஒட்டுமொத்த துறையும் எவ்வாறு செல்லரித்துக் கிடக்கிறது என்பது குறித்து தான் கவலைப்பட வேண்டிய தருணம் இது.


4 comments:

Yaathoramani.blogspot.com said...


'கிரேட்' பெருமாளோ எதுவும் நடைபெறாதது போல எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு தினகரன் அலுவலக்ம் சென்று சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய‌ தனது பணிகளைத் தொடர்ந்தா

ர்இது போன்ற ஆட்களே இப்போதெல்லாம்
ஊடகத்தின் தூண்களாக இருப்பதுதான்
வெட்கக் கேடு//

.

மதி said...

தனி மனித ஒழுக்கம் தான் முதலில் தேவை.பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கபடவேண்டும்

Anonymous said...

தினகரன் நிர்வாகியான பொன்னேரி நரிக்கு மாதம் ஒரு லட்சம் வேலூர் மேனேஜரும் அவர் தம்பி கனேசனும் கப்பம் கட்டுவதால் அங்கு எடிட்டர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்களாம். அப்டிங்களான்னா.?

Anonymous said...

2 எழுத்து நரி 3 எழுத்து ரமேசாங்கண்ணா. இது உலகமகா கேடிங்கோ. ஆட்சி மாறினதும் சி.எம்மை சந்திக்க தூதுவிட்டு தப்பிச்சிட்ட இந்த நரி சிமெண்ட் சீனியையும் சூதாட்டத்துல சிக்கவெச்சிடுச்சு.