Wednesday 22 August 2012

நின்னு போன என் விகடன்…!



விகடன் குழுமத்தில் இருந்து ஜூலை மாதம் முதம் வாரம்தோறும் ரூ.5 ரூபாயில் குமுதம் சைஸூக்கு என் விகடன் வெளிவருகிறது என்று ஏற்கனவே எழுதியிருந்தோம்.இதற்காக ஒரு குழுவினர் அல்லும் பகலும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

தற்பொழுது இந்த திட்டம் விகடன் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டு விட்டது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக இப்பொழுது ஆ,வி,விற்பனை குறைந்து விட்டது என்பது.

இரண்டாவது என் விகடன் சந்தையில் விற்பனைக்கு வந்தால் அது ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கும் ஆ.விகடன் விற்பனையை இன்னும் காலி செய்து விடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டதாம்.

ரூ.17 கொடுத்து ஆ.வி.வாங்குவதற்குப் பதிலாக ரூ.5 க்கு என் விகடனை வாங்குனாப் போதும் என்று முடிவெடுத்து விட்டால் கல்லா நிறையாது என்னும் லாஜிக்.

ஆகவே என் விகடன் வேண்டாம்,இப்பொழுதைக்கு இருப்பதை உருப்படியாய் நடத்துவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்.

ஆகவே என் விகடன் நின்னு போச்சு.

டான் டான் டான்,ஆனந்த விகடன்.

நின்னுட் டான் விகடன்.

அவன் என் விகடன்.





1 comment:

HOTLINKSIN.COM திரட்டி said...

பிரிண்ட் மீடியாவின் அனைத்து நாளிதழ், வார, மாத இதழ்கள் எல்லாமே நாளுக்கு நாள் விற்பனை குறைந்துதான் வருகிறது. எல்லாம் இன்டர்நெட்டின் ஆதிக்கம்தான். அவனவன் மொபைலில் இன்டெர்னெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற பத்திரிகைகளை எத்தனை நாட்களுக்குத்தான் வாங்கிப் படிப்பார்கள்.