ஈழத்தில் சிங்கள இனவாதத்தால் காலங்காலமாக மறுக்கப்பட்ட தங்கள் உரிமைகளுக்காகவும் இழந்த உடைமைகளை மீட்கவும் போராடிய தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.இதன் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரங்கேறியது.லட்சக்கணக்கில் தமிழர்கள் அழித்தொழிக்கப் பட்டனர்.சர்வதேச வல்லாதிக்கங்களின் துணையுடன் இலங்கை அரசு இந்தக் கோரத்தையும் கொடூரத்தையும் நடத்தியது.ஆனால் இனப்படுகொலை மட்டுமல்ல,தமிழர்களின் மரண ஓலமும் ஒப்பாரியும் கூட இங்குள்ள ஊடகங்களால் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை.
இனப்படுகொலை முடிந்து 3 ஆண்டுகளாகியும் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் இன்னமும் அகதிகளாய் இருக்கின்றனர். அடுத்த வேளை சோற்றுக்குக் கூடத் தங்களை அழித்தவர்களிடம் கையேந்தி கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுள்ளது.அதே வேளை இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ஷேவோ இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல குற்றவாளிக் கூண்டில் கூட ஏற்றப்படவில்லை. அவரை போர்க்குற்றவாளி என அறிவிக்கக் கோரியும்,சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் இலங்கை அரசு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளை நடத்தியும், அந்நிய நாட்டு வர்த்தக நிறுவனங்களை அழைத்து வந்து புதிய தொழில் தொடங்கியும் தனது கொடூர முகத்தை மறைக்கவும் கொலைக் கரங்களைப் பரிசுத்தமாக்கவும் திட்டமிட்டு முயல்கிறது.புத்தம் புதிய அனைவரும் விரும்பும் அமைதியான இலங்கை என்னும் பிம்பத்தை உலகமெங்கும் நிறுவ இதன் மூலம் முயல்கிறது.
ஆனால் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை மதித்து திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்,பாடகர் ஹரிகரன் உள்ளிட்டோர் தங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.இந்திய விவசாய நிலங்களை மலடாக்கிய சுவாமிநாதன் கூட தமிழர்களின் எதிர்ப்பால் அங்கு மேற்கொள்ள இருந்த தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டார்.
ஆனால் இப்பொழுது தமிழர்களின் எதிர்ப்பை மயிருக்கும் மதிக்காமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அங்கு பல்கலைக்கழகம் ஒன்றினை கொழும்பு நகரில் நிறுவியுள்ளது. எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக் கழகம் என்னும் பெயரில் தன் கல்வி வர்த்தகத்தை கோலாகோலமாக தொடங்கியுள்ளது.
முதல்மந்திரி ரிஷாத்தை வரவேற்கும் பொன்னவைக்கோ,துணைவேந்தர், SRM,பல்கலைக்கழகம் |
நாடாளுமன்ற உறுப்பினர் ரங்காவை வரவேற்கும் துணைவேந்தர் பொன்னவைக்கோ |
குத்துவிளக்கு ஏற்றும் ரங்கா,நாடாளுமன்ற உறுப்பினர் |
குத்துவிளக்கு ஏற்றும் சிவராஜன் சின்னராஜா,சேர்மன் SRM லங்கா, |
துவக்க விழா கும்மாளத்தின் பொழுது |
குத்துவிளக்கு ஏற்றும் பொன்னவைக்கோ,SRM,பல்கலைக்கழக துணைவேந்தர்,சென்னை. |
கொழும்பு பிரஸ் மீட்டில் |
இந்திய-இலங்கை SRM பல்கலைக்கழக கும்பல்களின் குரூப் போட்டோ |
இந்த எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனத்தின் பின்னணி என்ன..?
தனக்கு கிடைக்காத கல்வி தனது பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்,தன் தாலியை அடகு வைத்தும்,கந்து வட்டிக்குக் கடன் வாங்கியும்,நிலத்தை விற்றும்,கால் வயிற்றுக் கஞ்சியுடன் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான அப்பனும் ஆத்தாள்களும் அனுப்பிய காசில் பிரமாண்டமாய் தமிழ்நாடு முழுவதும் விண்ணை முட்டும் கட்டிடங்களாகவும்,நூற்றுக்கணக்கான கோடிகள் கையிருப்பாகவும்,கல்விச்சாலைகளாகவும் உருவானது தான் தமிழ்நாட்டின் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனம்.கடந்த 20 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாதது.அதில் தரமான கல்வி என்று சொல்லிக்கொண்டு தமிழர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தமும்,வியர்வையும் இரண்டறக் கலந்துள்ளது.
சென்னை SRM,பல்கலைக்கழகம், |
இவ்வாறு தமிழனின் ரத்தத்தையும் வியர்வையும் தமிழ்நாட்டில் உறிஞ்சிய காசில் விண்ணை முட்டும் அளவில் இங்கு தமிழ்நாட்டில் உருவான நிறுவனம் இன்று,இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு எதிராய் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திய இலங்கை சிங்கள அதிகாரவர்க்கத்தின் ஆசியுடன் கொழும்பு நகரில் புதிதாய் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
சிங்கள இனவாதத்திற்கு எதிராய் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க,அதே கொலைகாரர்களுடன் கைகுலுக்குபவர்கள் எவ்வளவு கேடுகெட்ட அயோக்கியர்களாய் இருக்க வேண்டும்..?எவ்வளவு பணவெறியும் அதிகார வெறியும் இருக்க வெண்டும்..?(சில மாதங்களுக்கு முன் தமிழர்களின் எதிர்ப்பால் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று மறுத்த நிறுவனம் இன்று அதனைப் பொய்யாக்கி பிரம்மாண்டமாய் உருவாக்கியுள்ளது)
இதுதான் எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனம் உருவான பின்னணி.
இனி இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம் தோன்றிய கதையைப் பார்ப்போம்.
கள்ளச் சாராயம் காய்ச்சியவனெல்லாம் தனது கெட்ட பெயரை மறைக்க கல்வித் தந்தை ஆனது போல, கட்டப்பஞ்சாயத்து செய்தவனெல்லாம் இன்று அரசியல்வாதியானது போல,முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களைத் தக்க வைக்கவும்,அரசியல்வாதிகளின் மிரட்டலில் இருந்து காக்கவும்,ஊடகங்களில் முதலீடு செய்வதும் அதனைப் புதிதாய் ஆரம்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.இதன் முலம் தங்களுக்கு உரிய பாதுகாப்பினை அதிக செலவில்லாமல் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
எஸ்.ஆர்.எம்.நிறுவனம் கல்வியில் அடித்த கொள்ளையினைப் பாதுகாக்கவும் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்கவும் உருவாக்கியது முகமூடிகளில் ஒன்று தான் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி.மற்றும் புதிய தலைமுறை வார பத்திரிகை.
என்ன தான் உண்மை,நடுநிலைமை,நேர்மை என்று பித்தலாட்டம் செய்தாலும் அது தான் உண்மை.இது அனைவருக்கும் தெரியும்.இப்படிப்பட்ட குழுமத்தின் பின்னணியில் இருந்து தான் எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது.(ஹிந்து ராமுக்கு அடுத்து இன்னொரு தூதர் தமிழ்நாட்டில் இருந்து உருவாகிறார்..பராக்..பராக்..)
இனி இறுதிப்பகுதிக்கு வருவோம்.
நம்மூர் பத்திரிகையாளர்கள் 200 ரூபாய் கவர் வாங்கினால் அவர்களுக்கு ஆதரவாய் கூடுதலாக 4 வரிச் செய்தி எழுதுவது வழக்கம்.அதைப்போல பத்திரிகை நிறுவனங்களும் தங்களுக்கு விளம்பரம் கொடுத்தாலோ. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவோ,பொருள் ஆதாயத்திற்காகவோ தங்களுடன் வர்த்தக நலன்களைப் பேணும் நிறுவனங்கள் என்றாலோ, அவர்களுக்கு எதிராய்ச் செய்தி வெளியிடுவதில்லை.
இதுதான் நம்மூர் நிறுவனங்களின்,பத்திரிகையாளர்களின் லட்சணம்.இப்படி இருக்கையில் புதிய தலைமுறையில் நேர்மை என்பது இனி இருக்குமா..?இனி ஈழத்தமிழர் பிரச்சனையில் நடுநிலையாகச் செயல்படும் என்று எப்படி எதிர்பார்க்க முடியுமா..?
புதிய தலைமுறை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழர்களூக்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.நாமும் ஒரு பதிவில் இதைச் சொல்லியிருக்கிறோம்.பிரேம்சங்கர் மனைவியின் உண்மையைத் தேடி என்னும் டாகுமெண்டரியில் அப்பட்டமான இலங்கை அரசு ஆதரவு குரல் வெளிப்பட்டது.அதன் பின் சமீபகாலமாக ஈழத்தமிழருக்கு ஆதரவான செய்திகளை மிக அதிக அளவில் வெளியிட்டு வருகிறது.
இதனை நாம் இரண்டு விதமாகப் பார்க்கலாம்.தனது பல்கலைக் கழகத்தை கொழும்புவில் துவங்கி அங்கு கொள்ளையடிக்கவும் அதற்கான அனுமதியை பைசாச் செலவின்றி வாங்கவும் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தியதா..?அதனை அங்குள்ளவர்களுக்கு உணர்த்துவதற்காக இலங்கை அரசுக்கு எதிர்ப்புச் செய்திகளை அதிக அளவில் த்னது தொலைக்காட்சியில் வெளியிட்டதா..?
இது தவறு என்று நீங்கள் வாதிடலாம்.உண்மையில் நடுநிலையாகத் தான் உள்நோக்கமின்றி செய்திகளை வெளியிட்டது.நீங்கள் அவதூறாகச் சொல்கின்றீர்கள் என்றும் சொல்லலாம்.
அதனை உன்மை என்று வாதத்திற்காய் வைத்துக் கொள்வோம்.
ஆனால் தமிழர் விரோதப்போக்கைக் காட்டும் அருகாமை நாடான கொழும்புவில் பல நூறு கோடிகளைக் கொட்டி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தையும், இனி தொடர்ச்சியாக அங்கு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீடுகளைக் காக்கவும் சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு தலையாட்டும் பொம்மையாக அதன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புதிய தலைமுறை செயல்படாது என்று யாரும் நம்ப முடியுமா..?
நம்மூரில் தனியார் தொலைக்காட்சியில் மூன்று தொடர் வெளியிடும் வாய்ப்புக்காக ஒரு பத்திரிகை நிறுவனம் எப்படியெல்லாம்வளைகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
இவ்வளவு ஏன் சென்ற ஆட்சியில் தமிழக அரசின் லைப்ரரி ஆர்டர்(வெறும் 1800 பிரதிகள் தான் ஜெண்டில்மேன்) தனது சிற்றிதழுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஈழப்படுகொலையில் ஆட்சியாளர்களின் பங்கை எதிர்த்து குரல் எழுப்பாமல் ஈனஸ்வரத்தில் முனங்கியவர்களும் உண்டு.
சொந்த நாட்டிலேயே 5000 பத்திரிகை விற்கும் முதலாளியிலிருந்து 5 லட்சம் விற்கும் முதலாளி வரை அனைவரின் லட்சணம் இதுதான்.
ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்த இன்னொரு நாட்டில் செயல்படும் நிறுவனம் தங்களது முதலீடுகளைளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் இனவாதத்திற்கும் ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படாது என்று உறுதியாய்ச் சொல்ல முடியுமா..?
இன்று கொலைகாரர்களுடன் தங்கள் வணிகத்திற்காக கைகுலுக்குபவர்கள்,தங்கள் வர்த்தகத்தைக் காப்பதற்காக நாளை அவர்களது கொலைகளை மறைக்க உடன்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..?
இன்று கொலைகாரர்களுடன் தங்கள் வணிகத்திற்காக கைகுலுக்குபவர்கள்,தங்கள் வர்த்தகத்தைக் காப்பதற்காக நாளை அவர்களது கொலைகளை மறைக்க உடன்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..?
அம்புட்டு யோக்கியமானவரா முதலாளி..?
கண்டிப்பாய் நடக்காது.இனி ஈழத் தமிழர் தொடர்புடைய விஷயத்திலும்,தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் விஷயத்திலும் இனி வரும் காலங்களில் படிப்படியாக......சிறிது சிறிதாக.....பாலில் துளித்துளியாய் நஞ்சு கலப்பது போல....புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தனது செயற்பாட்டை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அ) புதியதலைமுறை தொலைக்காட்சியில் இனி சிங்கள அரசுக்கு ஆதரவாய் செய்தி,நிகழ்ச்சி வெளியிடப்படலாம்.
ஆ)ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் சிங்கள அரசால் நடைபெறும் சம்பவங்களை இருட்டடிப்பு செய்யலாம்..அல்லது செய்தியைத் திசை திருப்பி விடலாம்.
இ)அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யுமாறு இருக்கலாம்.
ஈ)தமிழ் மீனவர் படுகொலையை இருட்டடிப்பு செய்வது....
இல்லை,அப்படிச் செய்ய மாட்டார்கள் என்பதற்கு யாராவது உத்தரவாதம் தர முடியுமா..?
இவ்வளவுக்குப் பின்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை என்றும் சிறப்பானது என்றும் எவராவது உங்களிடம் சொன்னால் அது தமிழனின் பிணக்குவியலின் மீது அதனை அடிவாரமாய்க் கட்டப்பட்டது என்று செவுளில் அறைவது போல் சொல்லுங்கள்.
முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் தனக்கான சவக்குழியைக் கூடத் தானே தோண்டிக்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார் மார்க்ஸ்.
ஆனால் இங்கோ தமிழர்களின் பிணக்குவியலின் மீது பிரம்மாண்டமாய் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சக குழுமம் நிறுவியுள்ளது.
இனி நேர்மை,நடுநிலை,துணிச்சல்,உண்மை ஆகியன கெட்ட வார்த்தைகள்.
போங்கடா நீங்களும்.....
16 comments:
பணத்துக்காக இவ்வளவு கேவலமாக இறங்குவார்கள் என்று நினைக்கவில்லை.
ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்த இன்னொரு நாட்டில் செயல்படும் நிறுவனம் தங்களது முதலீடுகளைளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் இனவாதத்திற்கும் ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படாது என்று உறுதியாய்ச் சொல்ல முடியுமா..?//அது மட்டுமல்ல.ஈழப்போரின் பொழுது ராஜபக்ஷேவின் நெட்வொர்க் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் வரை நீண்டு அவர்களைத் தனது வழிமுறைகளால் செயலற்றதாகி விட்டது.எல்லாம் பணம் படுத்தும் பாடு.அப்படி இருக்கையில் கொழும்பில் நிறுவனங்களை நடத்துபவர்கள் எந்த லட்சணத்தில் செய்தியை வெளியிடுவார்கள்..?
கள்ளச் சாராயம் காய்ச்சியவனெல்லாம் தனது கெட்ட பெயரை மறைக்க கல்வித் தந்தை ஆனது போல, கட்டப்பஞ்சாயத்து செய்தவனெல்லாம் இன்று அரசியல்வாதியானது போல,முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களைத் தக்க வைக்கவும்,அரசியல்வாதிகளின் மிரட்டலில் இருந்து காக்கவும்,ஊடகங்களில் முதலீடு செய்வதும் அதனைப் புதிதாய் ஆரம்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.//அருமை.இதை விட இப்பொழுதைய ஊடகங்களின் போக்கை யாரும் சொல்லி விட முடியாது..
புதிய தலைமுறையை விமர்சித்து யாரும் போராட்டம் நடத்துவார்களா?அவ்வளவு கூட வேண்டாம் வெற்று அறிக்கையாவது விடுவார்களா..?இல்லை..அப்படிச் செய்தால் நம் முகத்தை டிவியில் காட்ட மாட்டான் என்பதற்காக கண்டும் காணாமலும் கடந்து விடுவார்களா..?
இப்படிக்கு இளிச்சவாய்த் தமிழன்...
நிறைய புதுமையாகச் செய்கிறார்களே என்று நினைத்தேன். தங்களது நேயர் வட்டத்தை பெரிதாக்கி, பிறகு கருத்துத் திணிப்பை அரங்கேற்றுவதற்குத்தான் தடாலடியாகக் களம் இறங்குகிறார்கள் என்று இப்போது புரிகிறது. ஆனால், SRM மற்றும் புதியதலைமுறை இரண்டும் ஒன்றன் கிளை நிறுவனங்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? தேடிப்பார்க்க வேண்டும்...
பணத்துக்காக பிணம் கூட வாய திருக்கும் ... இவர்களும் அவற்றில் அடங்குவார்கள் ...இதில் சந்தேகமே இல்லை
சென்ற ஆட்சியில் தமிழக அரசின் லைப்ரரி ஆர்டர்(வெறும் 1800 பிரதிகள் தான் ஜெண்டில்மேன்) தனது சிற்றிதழுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஈழப்படுகொலையில் ஆட்சியாளர்களின் பங்கை எதிர்த்து குரல் எழுப்பாமல் ஈனஸ்வரத்தில் முனங்கியவர்களும் உண்டு என்று எழுதியிருக்கின்றீர்கள்...மனுஷ்யப்த்திரன் குறித்து சொல்லியிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.அவர் லைப்ரரி ஆர்டருக்காக மட்டும் ஜால்ரா தட்டலை.கனிமொழியுடனான நட்புக்காகவும் அதன் மூலம் கிடைக்கும் அனுகூலத்திற்காகவும் தான் ஜால்ரா தட்டினார்..
தனக்கு கிடைக்காத கல்வி தனது பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்,தன் தாலியை அடகு வைத்தும்,கந்து வட்டிக்குக் கடன் வாங்கியும்,நிலத்தை விற்றும்,கால் வயிற்றுக் கஞ்சியுடன் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான அப்பனும் ஆத்தாள்களும் அனுப்பிய காசில்---சவுக்கடி..மரத்துப் போன மனிதர்களுக்கு
பொன்னவைக்கோ ஒரு ஊழல் பேர்வழி.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொன்னவைக்கோ பணியாற்றிய பொழுது கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்ததையடுத்து,குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கவர்னர் விசாரணை நடத்த அனுமதி வழங்கி 2009 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.ஆனால் அதிலிருந்து கழுவிய மீனில் நழுவிய மீனாக தப்பித்தவர் தான் பொன்னவைக்கோ.இந்டப்படிப்பட்ட ஊழல் பேர்வழி தான் இப்பொழுது SRM துணைவேந்தர்.அவர் தான் இலங்கை சென்று வந்துள்ளார்.அங்கும் எதும் ஊழல் பண்னியிருப்பார்.இவர்ட்ட நேர்மை,நியாயம் எதிர்பார்ப்பது தப்புங்க..
வைகோ,சீமான்,நெடுமாறன் போன்றவர்கள் இதில் அமைதி காப்பது ரொம்ப அபத்தமாக இருக்கிறது.கொடுமையாகவும் இருக்கிறது.இவர்களாவது அரசியல் தலைவர்கள் தங்கள் முகத்தை டிவியில் காட்ட வேண்டுமென்பதற்காக தங்கள் செய்திகளைப் போடும் நிறுவனத்தைப் பகைக்கக் கூடாது என்பதும் காரணமாய் அமைதி காக்கலாம்.அரசியல்வாதிகளிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதும் அபத்தம்.
ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனைக்காகவே இயக்கம் ஆரம்பித்ததாகச் சொல்லி இன்று ஒரு முகத்தையும் பெற்றிருக்கும் மே 17 இயக்கம் கருத்து திருமுருகன் காந்தி என்பவர் கள்ள மவுனம் காக்கிறார்.
அமைப்பு ஆள் பின்னணி இல்லாத இவர் பிரபல்யம் ஆனதே ஏர்டெல்,ஹரிகரன் போன்றவற்ரை எதிர்த்து நீன்ட அறிக்கை எழுதி வெளியிட்டுத் தான்.ஆனால் இவரும் அமைதியா இருக்கார்.இதைத்தான் புரிந்து கொள்ள கஸ்டமா ருக்கு.ஒருவேளை இவரும் இவரது அப்பாவும் பு.த.டிவியில் தினசரி வருவது நின்று விடும் என்ற பயம் காரணமா ருக்குமோ.(மின்சார வாரியம் தொடர்புடைய பிரச்சனையில் அடிக்கடி ரெண்டு நாளைக்கு வரும் பெரியவர் காந்தி)
பாழாய்ப் போன தமிழனுக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது....
மக்குப் பயலாகவே இருக்கான்.யாராவது சொன்னாத் தேவல...
உண்மையான தமிழர்களே, புதிய தலைமுறையை தூக்கி எறிந்து புறக்கணிப்பது,பச்சைமுத்து நிறுவனங்களை ஸ்தம்பிக்க செய்வது இதற்கு ஒரே வழி,தமிழ் இயக்கங்கள் இதை முன்னெடுத்து செய்யவேண்டும்.
இந்த செய்தியை படிக்கும் அனைவரும் ஒரு விடயத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ளலாம் இது தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்று. SRM University என்பது ஒரு மிக பெரிய விருட்சம் அதன் மீது எவரும் கல் எறிவதன் மூலம் அதனை சாய்த்து விட முடியாது. இந்தியாவின் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் சேவையை இலங்கையில் நடாத்தி வருகின்றன. இந்தியாவின் பல நூறு நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன அவற்றுக்கு எதிராக உங்களால் குரல் குடுக்க முடியுமா??? இது வரையில் நான் இப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் மீதான பழிவாங்கும் செய்தியை படித்தது இல்லை. இத்தனை புகைப்படங்களை உங்கள் செய்தியில் இணைத்து ஒவ்வொரு படத்திற்கும் உங்கள் கருத்து முகம் சுழிப்பதாக உள்ளது. இது போன்ற செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் உங்கள் நோக்கம் மிக தெளிவாக புரிகின்றது. செய்தி என்பதற்காக எதனையும் வெளியிட முடியுமா? இந்த நிறுவனத்தை பழிவாங்குவதற்காக நீங்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்களின் புகைப்படத்தையும் இணைத்ததன் மூலம் அவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறி உள்ளீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா? தயவு செய்து இந்த செய்தியை படிப்பவர்கள் உண்மையை புரிந்துகொள்ளுங்கள்..
//இந்தியாவின் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் சேவையை இலங்கையில் நடாத்தி வருகின்றன. இந்தியாவின் பல நூறு நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன/
இருக்கலாம். ஆனால் இது தமிழ் நட்டில், தமிழனால் நடத்தபடுவது. மேலும் இவர் பொது வாழ்க்கைக்கு வந்து ஆட்சியை பிடிக்கும் ஆசையில் இருக்கிறார். அதனால் இது தனி மனிதனை பற்றிய செய்தி அல்ல.
உண்மையை இனி புதிய தலைமுறை உரக்க சொல்லுமா ? என்பது சந்தேகமே .நடிகர் அமிதாப் , பாடகர் ஹரிகரன் ஆகியோர் தமிழர் இல்லை .இலங்கை செல்ல வேண்டாம் என்ற கேட்ட போது பயணத்தை ரத்து செய்தனர் .நீங்கள் தமிழர் தமிழின விரோதியுடன் கூட்டணி தேவையா ? உங்களிடம் இல்லாத பணமா ? ஏன்? இந்த பண ஆசை .நீங்களும் இலங்கை பல்கலைக் கழகத்தை மூடி விடுங்கள் .உலக அரங்கில் வெறுக்கப் பட்ட சிங்களனுடன் கூட்டு எதற்கு .உங்கள் குட்டு உடைந்து விட்டது .புகைப் பட ஆதரங்களுடன் உங்கள் முகத்திரை கிழிந்து விட்டது .இனியாவது திருந்துங்கள் .இனி உங்களால் கொலைகார ராஜபட்செவிற்கு எதிராக கருத்து சொல்ல முடியுமா ?
Why do you mix trade and commerce with this essay? If India can do it with China or Pakistan what is wrong if we do it with SL?
Post a Comment