கடந்த வியாழன்(22-03-2012) அன்று சென்னை பிரஸ் கிளப்பில் கூடங்குளம் அணூமின் நிலையத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்களை பத்திரிகையாளர் என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டுள்ள சிலரால் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.
அதனைப்பற்றிக் காண்பதற்கு முன் நடந்தவற்றைப் பார்ப்போம்.
ஞாநி பேச்சு முடித்து அதன் பின் அரங்கிலிருந்து வெளியேறிய பொழுது நடைபெற்ற அநாகரிக சம்பவங்கள் வீடியோவில் பதிவாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஞாநி தனது கருத்தினை அவரது முக நூலில் பதிவு செய்துள்ளார்.அது இது தான்.
//கூடங்குளம் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கூட்டமைப்பின் அறிக்கையை இன்று சென்னை பிரஸ் க்ளப்பில் நிருபர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் அருள் எழிலன் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.
முதலில் என் பேச்சை ஒட்டி வந்திருக்கக்கூடிய ஆதரவுக் குரல்களுக்கு நன்றி.
எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் கூட்டறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடும் நிகழ்ச்சியில் பேசுவதற்கு என் முறை வந்தபோது, தி.மு.க, அதி.மு.க போன்ற கட்சிகள்தான் தங்கள் தலைவர்கள் கைதானால் உடனே பஸ் எரிப்பு, கடை உடைப்பு என்று வன்முறையில் ஈடுபடுபவை; ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக 200 நாட்களுக்கு மேல் ஆயிரக்கணக்கான மக்கள் துளியும் வன்முறை இன்றி நடத்தி வரும் ஒரே போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான்; அந்த மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லத் தொடங்கி, பெரியாரின் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் 144 தடை உத்தரவுக்கு எதிராகப் போராடிய வரலாற்றுடன் இடிந்தகரை போராட்டத்தை ஒப்பிட்டுச் சொன்னேன். போலீசை திரும்பப் பெற்று, அணு உலை வேலையை நிறுத்திவிட்டு, மீண்டும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் மக்கள் சார்பான விஞ்ஞானிகள் சொல்வது என்ன என்பதைக் கேட்கவும அரசுகள் முன்வரவேண்டும் என்று சொன்னேன்.
ஊடகங்கள் இதழியல் தொடர்பாக நான் சொன்ன கருத்துகள் மூன்று.
1. சுமார் 35 வருட காலமாக பத்திரிகையாளனாக இருந்துவரும் நான் இன்றைய நிலையை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் விருப்பு வெறுப்புகள் இல்லாமல் உண்மை நிலையை ஆராய்ந்து எழுதும் செய்திகள் வராமல், அரசு சார்பாகவே செய்தி வெளியிடுவது நியாயமா என்று பத்திரிகையாளர்கள் சிந்திக்க வேண்டும். இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு நிருபரும் கேமராமேனும் அலுவலகம் சென்றதும் தங்கள் தலைமை நிருபர், செய்தி ஆசிரியர்களிடம் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டும். இதைச் செய்யும் முதுகெலும்பு இல்லாமல் எதற்கு இந்தப் பிழைப்பு ? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?
2. அணு உலை ஆரம்பிக்கப்படும் என்று அரசு அறிவித்ததும் உதயகுமார் தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு உலைக்குச் சென்று அதைத் தடுத்திருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று எழுதி தினமலர், தொடர்ந்து 200 நாட்களாக அறவழியில் துளியும் வன்முறை இன்றிப் போராடும் உதயகுமாரையும் மக்களையும் வன்முறையில் ஈடுபட தூண்டும்விதத்தில் எழுதுகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தினமலர் செய்திருப்பது சட்டப்படி குற்றம் அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ( கைதட்டல்)
3. இடிந்தகரைக்குள்ளே ஊடகங்களும் பத்திரிகைகளும் போகக்கூடாது, டி.விகளின் ஓபி வேன்கள் செல்லக்கூடாது என்றெல்லாம் போலீஸ் தடுத்தபோது, கருத்துச் சுதந்திரம் எங்கே போயிற்று ? அதை எதிர்த்திருக்க வேண்டாமா? ஏன் அதைக் கண்டித்து ஒரு பத்திரிகையாளர் அமைப்பும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ? பிரஸ் கிளப் என்பது சீட்டாடவும் தண்ணியடிக்கவும் மட்டும்தானா?
இவற்றை நான் முதலில் பேசியபோது ஒரு சலசலப்பும் எழவில்லை. எனக்குப் பின் இன்னொரு எழுத்தாளர் பேசத்தொடங்கியபிறகு, ஒருவர் எழுந்து என் பேச்சு அவமரியாதையாக இருக்கிறது என்று எதிர்ப்பைத் தெரிவித்தார்.
எல்லா எழுத்தாளர்களும் பேசி முடித்ததும் கேள்வி பதில் சமயத்தில் நான் பதில் சொல்வேன் என்று எழிலன் அறிவித்தார். எல்லாரும் பேசி முடித்ததும் எழிலன் கூட்டம் முடிந்தது என்று அறிவித்ததும் முதலில் என்னை எதிர்த்தவரும் இன்னும் இருவரும் கேள்வி பதில் என்ன ஆயிற்று என்றார்கள். உடனே நான் என்னைக் கேள்வி கேட்டவருக்கு பதில் சொன்னேன்.
முதலில் சொன்னவற்றை திரும்பச் சொன்னேன். என் கருத்தில் எந்த அவமரியாதையும் இல்லை என்றேன்.
35 வருட காலமாக இந்த துறையில் இருக்கும் நான் பத்திரிகைத் துறையின் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டவன். இருமுறை சென்னை நிருபர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளராக இருந்தவன். சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பத்திரிகை ஆசிரியருக்கு சிறை தண்டனை விதித்தபோது நான்தான் நிருபர் சங்க செயலாளராகக் கண்டன இயக்கத்தை வழிநடத்தியவன். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் தொடங்கியதற்காக என்னை வேலை நீக்கம் செய்தபோது அதை எதிர்த்து நான்கு வருடம் வழக்காடி ஜெயித்து மீண்டும் வேலைக்கு வந்து அதை உதறியவன். இப்போதும் நான் பத்திரிகையாளன்தான். எனக்கு இந்தத் துறை இயங்கும் விதம் பற்றி விமர்சிக்கும் முழு உரிமை உண்டு என்றேன்.
தலைமை நிருபர், செய்தி ஆசிரியர் சொல்லித்தான் உங்கள் நிகழ்ச்சிக்கெல்லாம் வருகிறோம். உங்களை பல ஊடகங்களில் அழைப்பவர்கள் அவர்கள்தான். அவர்களிடம் போய் குறையை சொல்லுங்கள் என்று ஒருவர் சொன்னார். எல்லா ஊடகங்களிலும் பெரிய பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தேவைப்படும்போது கூப்பிட்டு அவர்கள் செய்தி வெளியிடும் முறை பற்றிய என் விமர்சனத்தை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். நேரில் பார்க்கும்போதும் சொல்கிறேன். இங்கே உங்களிடமும் சொல்கிறேன் என்றேன்
கூச்சல் எழுப்பிய மூவரும் தொடர்ந்து எதிர்த்தனர். உடனே விமர்சகர் அ.மார்க்ஸ் எழுந்து சமூகத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீறலும் மக்களுக்கெதிரான அராஜகமும் நடக்கும்போது அதைப் பற்றி ஊடகங்கள் போதுமான தகவல்களை வெளியிடாத வருத்தத்தில் வேதனையில் பேசப்பட்ட பேச்சு என்றும் அது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் சொன்னார். நிருபர்கள் செய்தி கொடுத்தால் கூட முத்லாளிகளும் நிர்வாகங்களும் விரும்புபவைதான் வெளியாகும் என்பதை தாங்கள் அறிவோம் என்றும் சொன்னார்.
கூச்சலிட்ட ஒருவர் நான் என் கருத்தை வாபஸ் வாங்கவேண்டுமென்றார். மன்னிப்பு கேட்கவேண்டுமென்றார். நான் முடியாது என்று மறுத்தேன். உடனே எல்லாரும் வெளியே போங்கள். மேடையில் ஒருவரும் இருக்கக்கூடாது எல்லாரும் பிரஸ் க்ளப்பை விட்டு வெளியே செல்லுங்கள் என்று இருவர் கத்த ஆரம்பித்தனர். நான் இறங்கி வெளியே போய்விட்டேன்,
அரங்கிலிருந்து வெளியேறி வராந்தாவைக் கடக்கும்போது ஒருவர், ஞாநியைப் பிடி. கதவைப் பூட்டு. அடி அவனை என்றார். நான் திரும்பிப் பார்த்து, அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று சொன்னபடி எந்தப் பதட்டமும் இல்லாமல் நடந்து வெளியே போய் சாலையில் இருந்த நண்பர் வண்டியில் ஏறி எழும்பூர் தாயகம் அலுவலக வளாகத்தில் கூடங்குளம் மக்கள் மீதான முற்றுகையைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த பெண் எழுத்தாளர்களை வாழ்த்திப் பேசப் போய்விட்டேன்.
சேப்பாக்கம் பிரஸ் க்ளப்பிலிருந்து எழும்பூர் சென்று சேர்வதற்குள் பல பத்திரிகையாளர்கள் போன் செய்தார்கள். எல்லாரும் பிரஸ் க்ளப்பில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தான். எதிர்ப்புக் குரல் எழுப்பிய நால்வரில் இருவர் போலி பத்திரிகையாளர்கள் என்றும் க்ளப் வளாகத்தில் எப்போதும் திரிந்தபடி சீட்டாட்டம், குடித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவோர் என்றும் நடந்த சலசலப்புக்கு தாங்கள் என்னிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த ஆறு அசல் பத்திரிகையாளர்களும் சொன்னார்கள்.
சென்னை பிரஸ் க்ளப், சென்னை நிருபர்கள் சங்கம் இன்னும் ஓரிரு பத்திரிகையாளர் அமைப்புகளில் எல்லாம் தேர்தல் நடக்காமலே பத்தாண்டுகளுக்கு மேல் கழிந்திருக்கின்றன. அந்த சமயங்களில் இவற்றின் நிர்வாகிகளாக இருநதவர்கள் தார்மிக உரிமை மட்டுமன்றி எந்த சட்ட உரிமையின் கீழ் பதவிகளில் இருந்தார்கள் என்பதே கேள்விக்குறி.
நேர்மையான, உண்மையான பல பத்திரிகையாளர்கள் இந்த நிலையை மாற்ற சக்தி இல்லாமலும் நமக்கேன் வம்பு என்றும் ஒதுங்கி நிற்கிறார்கள்.
இத்தகைய சூழலில் சில போலிகள், அரசு, காவல் துறையின் ஒற்றர்கள் பத்திரிகையாளர் போர்வையில் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நேர்மையை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் துறையில் நடக்கும் அநீதிகள் அக்கிரமங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அதில் ஒரு சிறு துளியை இன்று நான் பத்திரிகையாளர்கள் முன்பே பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதே சலசலப்புக்குக் காரணம். இதை எழுதும் இரவு நேரம் வரையிலும் எனக்கு தொடர்ந்து வரும் எண்ணற்ற ஊடக பத்திரிகைத் துறை நண்பர்களின் போன் உரையாடல்கள் இந்த துறையில் சீரழிவு எவ்வளவு ஆழமாகப் போய்விட்டது என்பதையும், அது குறித்து உள்ளுக்குள்ளேயே வெதும்பிக் கொண்டிருப்போர் எண்ணிக்கைதான் அதிகம் என்பதையும் எனக்குக் காட்டுகின்றன.
இன்றைய நிகழ்வு பற்றிய என் ஒரே வருத்தம், அ.மார்க்ஸ், எழிலன் போன்றோருக்கு தர்மசங்கடம் ஏற்பட நேர்ந்தது பற்றி மட்டும்தான். என் நிமித்தம் வருத்தம் தெரிவிக்க நேர்ந்த மார்க்ஸிடமும் எழிலனிடமும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். (முற்றும்)//
ஞாநியின் கருத்து இப்படி நேர்மையுடனும் வெளிப்படையுடனும் இருக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொருளாளர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு திரியும் அண்டப்புளுகு அன்புவின் அறிக்கையைப் பார்ப்போம்.//
பத்திரிகையாளர் ஞானி தப்பி ஓட்டம்.
கூடுங்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவாக, எதிராக பல அமைப்புகள், தனி நபர்கள் நிதி கொடுக்கும் அமைப்புகளின் பின்னணியில் களத்தில் இறங்கி அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்..
கூடுங்குளம் எதிர்ப்பு போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு ஆதரவாக மார்க்ஸ் தலைமையில் ஒரு குழுவினர் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் மீடியாக்களின் ஹிரோவாக வெளிகாட்டி வருகிறார்கள்.
இதன் உச்சகட்டமாக தமிழக அரசு கூடங்குளத்தில் அணு மின்நிலையம் தொடங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்தப்பின்பு, அருள் எழிலன் என்பவர் மார்க்ஸ், பத்திரிகையாளர் என்ற பெயரில் பொழப்பு நடத்தும் ஞானி இவர்களை வைத்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று(22.3.12) 11மணிக்கு படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூடுங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.
அந்த கூட்டத்தில் புதிய தலைமுறை டிவி வந்த பிறகு, அந்த டிவியில் பத்திரிகையாளர் என்ற போர்வையில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, கண்ணாபிண்ணா என்று, சமுதாயத்திற்கு எதிராக கருத்துக்களை அள்ளிவீசும் ஞானி பேசும் போது கூடுங்குளம் பிரச்சனைப்பற்றி பேசாமல், பத்திரிகையாளர் மன்றத்தின் செயல்பாடுகளையும், உறுப்பினராக உள்ள பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக தாக்கி பேசினார். தினமலர் நாளிதழை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.
இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள், ஞானி பேச்சை நிறுத்தும்படி கூறினார், நான் அடியாட்கள் வைத்து உங்களை உதைப்பேன் என்று இன்னும் ஆவேசமாக தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தையும், தினமலர் நாளிதழைப்பற்றியும் மிகவும் மோசமாக பேச பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்கள் ஞானிக்கு எதிராக திரண்டு எதிர்ப்பு தெரிவித்து, விரட்டி அடித்தார்கள்...ஞானி தப்பி ஒடினார்...
பத்திரிகையாளர் என்ற பெயரில் பொழப்பு நடத்தும் ஞானிக்கு தமிழக அரசின் செயல்பாடுகளைப்பற்றியோ, தமிழ்நாட்டின் நிலைப்பற்றியோ, தமிழக மக்களின் வாழ்வதாரங்களை பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது...
தரக்குறைவாக, மிக மோசமாக சில பத்திரிகைகளில் எப்போதாது எழுதுவார். அவ்வளதான். இவரை மிகப்பெரிய அறிவாளி, மூத்த பத்திரிகையாளர் என்று சரித்திரம், புதுமை படைப்பதாக கூறும் அறிவாளிகள் நிறைந்த புதிய தலைமுறை டிவி நிர்வாகம் இப்படிப்பட்டவர்கள் அறிமுகப்படுத்தி, வளர்த்துவிட்டு நிகழ்ச்சிகளில் பேசவிட்டு தமிழ் சமுதாயத்தை சீரழிக்கிறது..
ஞானி விரட்டியடிக்கப்பட்ட பிறகாவது இவரைப்போன்றவர்களை புதிய தலைமைமுறை டிவி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல், திறமையானவர்கள் ஊக்குப்படுத்துவார்களா?///
இது தான் மக்கள் செய்தி மையம் என்ற பெயரில் அன்பு வெளியிட்ட அறிக்கை.அன்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும்,எழுதிய முறையும்,எழுத்துப்பிழைகளும் அவரது தரத்தை உணர்த்தும்.ஆனால் நம்புங்கள் அவர் தான் பாரம்பரியமிக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொருளாளர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்.
அன்புவைப் பற்றி நமது வாசகர்களுக்கு நன்கு தெரியும்.இவரைப்பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள நமது முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.
http://kalakakkural.blogspot.in/2011/09/blog-post_595.html
http://kalakakkural.blogspot.in/2011/10/blog-post_31.html
http://kalakakkural.blogspot.in/2011/09/blog-post_27.html
இவரது கருத்து இப்படி இருக்க சென்னை பிரஸ் கிளப்பின் இணைச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமாள் என்னும் பாரதி தமிழனோ சம்பவம் நடைபெறும் பொழுது மன்றத்திற்கு வந்து தவறு செய்தவர்களைக் கண்டிக்காமல் கூட்டம் நடத்தியவர்களைச் சமாதானப் படுத்தி விட்டார்.காறணம் அந்த வெட்டிக் கும்பலின் பலத்தில் தான் இவர் தொடர்ந்து தேர்தல் நடத்தாமல் இணைச் செயலாளராக நீடித்துக் கொண்டிருக்கிறார்.
இனி செய்திக்கு வருவோம்.
பிரஸ் கிளப்பில் ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு இந்த அவமானம் எப்படி நிகழ்ந்தது?
இதற்கு என்ன காரணம்?என்று அறிவதற்கு முன்னால் பிரஸ் கிளப் இன்று யார் கைப்பிடியில் யார் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இப்பொழுது இது மோசடிக் கும்பலின் பிடியில் இருக்கிறது.
ஊர் உலக அரசியல் நியாய அநியாயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள் அங்கம் வகிக்கும் சென்னை பிரஸ் கிளப்பிற்கு கடந்த பத்தாண்டுகளாகத் தேர்தலே நடக்கவில்லை என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
அதற்கு என்ன காரணம்?யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது இந்தப் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டில் தான் சென்னை பிரஸ் கிளப்பிற்குத் தேர்தல் நடந்திருக்க வேண்டும்.அப்பொழுது பொதுச்செயலாளராக இருந்தவர் சிவக்குமார் என்பவர்.இவர் தி ஹிந்து நாளிதழில் அப்பொழுது கிரைம் பீட் பார்த்து வந்தார்.இவரின் பணி என்னவென்றால் குற்றங்களைத் துப்பறிந்து குற்றவாளிகளை வெளியுலகுக்கு அடையாளம் காட்டுவது.ஆனால் இவரே ஒரு குற்றவாளி என்பது தான் கசப்பான உண்மை.
சிவகுமார்
பெரும்பாலான நேரங்களில் இவர் காவல்துறையிடம் சிக்கும் குற்றவாளிகளை தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் காப்பாற்றி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பார்த்தார்.இவரின் இந்த செயலுக்கு ஒத்துவராத காவல்துறை அதிகாரிகளை தி ஹிந்து நாளிதழில் மிக மோசமாக எழுதி வந்தார்.இதற்குப் பயந்து கொண்டு இவருக்கு உடந்தையான திகாரிகல் இருந்தாலும் நேர்மையான அதிகாரிகல் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
அப்பொழுது சென்னை காவல்துறை ஆணையாளராக இருந்த விஜயகுமார் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தார்.இந்த சூழ்நிலையில் இவருக்கு அப்பொழுது நெருக்கமாக இருந்த திலகவதி ஐபிஎஸ் அவர்களை சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளராக நியமிக்க இருப்பதாக ஒரு செய்தியை தி ஹிந்து நாளிதழிலும் இவரது கூட்டாளிகளாக இருந்த தினமலர் குபேந்திரன் மற்றும் ஒரு சிலரிடம் சொல்லி அவர்கள் பணியாற்றும் பத்திரிகைகளிலும் செய்தியை வரவழைத்து விட்டார்.
இந்தச் செய்தியால் கோபமடைந்த விஜயகுமார் தனக்கு கீழ் பணியாற்றும் அத்தனை காவல்துறை அதிகாரிகளிடமும் சிவகுமார் என்பவர் என்னென்ன ஆப்ளிகேஷன் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார் என்ற தகவல் முழுவதையும் கேட்டு வாங்கினார்.அந்தத் தகவலை அப்படியே அன்றைய தி ஹிந்து நிர்வாகப் பொறுப்பில் இருந்த என்.ரவிக்கு கிடைக்கும் படி செய்து விட்டார்.அதற்குப் பின்.ரவி.சிவகுமாரை உடனடியாக வேலையில் இருந்து ராஜினாமா செய்யும் படி உத்தரவிட்டார்.அப்பொழுது தான் சிவகுமாரின் மோசடி வேலைகள் தி ஹிந்து ஊழியர்கள் மற்றும் பத்திரிகை உலகுக்கே தெரிய வந்தது.(தினமல்ர் குபேந்திரனுக்கும் இதையொட்டி பிரச்ச்னை ஏற்பட்டது.அப்பொழுது அவரை எச்சரித்த நிர்வாகம் அதன்பின் சில காலத்தில் அவரை நீக்கம் செய்தது)
தி ஹிந்து நாளிதழில் இருந்து சிவகுமார் ராஜினாமா செய்தவுடன் அவரைக் கைது செய்ய காவல்துறை தயாராக இருந்தது.இதைத் தெரிந்து கொண்ட சிவகுமார் தன் மனைவி குழந்தைகளுடன் தி ஹிந்து அலுவலகத்திற்கு வந்து ரவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.மன்னிக்க மறுத்த ரவி என்.ராமைச் சென்று பார்க்கும் படி கூறி விட்டார்.ராமின் காலிலும் குடும்பத்துடன் விழுந்தார்.அதன் பிறகு தி ஹிந்து நாளிதழின் இணையப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.அதற்குப் பிறகுஅலுவலக நேரம் மற்ற நேரங்களில் ராம் எங்கு சென்றாலும் அவருக்கு பெட்டி தூக்கும் பணியை சிவகுமார் செய்து வந்தார்.
-------
மோசடி வேலைகள் வெளியுலகுக்குத் தெரிந்த இந்த சூழ்நிலையில் பிரஸ் கிளப் தேர்தல் நடந்தால் அதில் கட்டாயம் மண்ணைக் கவ்வி விடுவோம் என்ற பயம் ஒரு பக்கமும் தி ஹிந்து வில் இருந்து வெளியேற்றி விட்டால் பிரஸ் கிளப் செயலாளர் என்ற பொறுப்புத் தன்னைக் காவல்துறையின் கைதில் இருந்து காப்பாற்றும் என்ற எண்ணத்திலும் தேர்தல் நடத்துவதை சிவகுமார் தள்ளிப் போட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தி ஹிந்துவில் கல்வி நிருபராக இருந்த கே.ராமச்சந்திரன் தினமணியில் கல்வி நிருபராகப் பணியாற்றியவரும் பிரஸ் கிளப்பில் தலைவராக இருந்த வருமான இருந்த பொன் தனசெகரன் இருவரும் சென்னை பிரஸ் கிளப்புக்கு நன்கொடையில் எஸ் ஆர்.எம்.நிறுவனம சார்பில் கட்டிடம் கட்டித் தருமாறு எஸ் ஆர்.எம்.கல்லூரியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பொன்னவைக்கோ வைச் சந்தித்து கோரிக்கை வைக்கின்றனர்.இவர்களது கோரிக்கை பச்சமுத்துவிடம் சொல்லி ஒப்புதல் பெறப்படுகிறது.
இது குறித்து பொன் தனசேகர் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகளிடம் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கிறார்.இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் தலைவர் பொன்.தனசேகருக்குத் தெரியாமலே பச்சமுத்துவை நேரில் சந்தித்து உறவைப் பலப்படுத்தி அதன் பின் கட்டிடம் கட்ட்த் தொடங்கும் முன்னே பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகிறார்.
இதனால் மனம் உடைந்த பொன்.தனசேகர் கட்டிடம் கட்டுவதற்கு முன்பே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துகிறார்.ஆனால் அவரது கோரிக்கை செவி சாய்க்கப் படவில்லை.இதன் பிறகு ஒரு கட்டத்தில் இனியும் பிரஸ்கிளப் தலைவர் பதவியில் தொடர்ந்தால் சிவகுமார் செய்யும் தில்லுமுல்லுவால் தனது பெயருக்கும் களங்கம் வந்துவிடுமோ என்ற பாய்த்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார்.அந்த ராஜினாமா கடிதத்தில் தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இவரது ராஜினாமா சிவகுமாருக்கு வசதியாகிப் போனது.இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஒவ்வொருவராகத் தாங்களாக விலகிக் கொண்டனர்.இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் மற்ற பத்திரிகைகளில் கிரைம் பீட் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் மோசடி வேலையில் ஈடுபடும் நபர்களையும் காலியாகவுள்ள நிர்வாகக் குழுப் பொறுப்புக்கு யாரையும் கேட்காமல் நியமனம் செய்தார்.
இவரால் நியமிக்கப் பட்டவர்கள் யார் என்றால் கோசல்ராம்.குபேந்திரன்,ரஜினிகாந்த்(அன்புவின் எடுபிடி),அன்பழகன் என்ற அன்பு.பெருமாள் என்கின்ற பாரதி தமிழன்,அசதுல்லா,இப்படி ஒட்டு மொத்தமாக தனக்கு வேண்டியவர்கள் மற்றும் தனது கட்டப் பஞ்சாயத்துக்கு உடந்தையாக இருந்தவர்களையெல்லாம் நிர்வாகிகளாக ஆக்கிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
பெருமாள் என்கிற பாரதி தமிழன்
அண்டப்புளுகன் அன்பு
அப்பொழுது இணைச்செயலாளர் பொறுப்புக்கு பெருமாள் என்ற பாரதி தமிழன் என்பவரையும் பொருளாளர் பொறுப்புக்கு அன்பு என்கின்ற அன்பழகனையும் நியமித்தார்.மற்றவர்கள் நிர்வாக குழு பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.
குலேந்திரன்
ரஜினிகாந்த்
கோசல்ராம்
அசதுல்லா
இவ்வாறு சிவகுமார் அனைவருக்கும் பொறுப்புக்களை வாரி வழங்கினார்.சிவக்குமார் பாரதி தமிழனுக்கு இணைச் செயலாளர் பதவியை வழங்கினார்.
சிவகுமாருக்கும் பெருமாளுக்கும் ஏற்பட்ட ஆழமான நட்புக்கான பின்னணி சுவாரசியமானது.
அப்பொழுது தனியார் வானொலி ஒன்றில் கோழிக்கறி விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் இருவர் பேசிக்கொண்ட டயலாக் இது தான்.
நம்ம கோழிக்கறியை எப்படி பிரபலமாக்குறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்.”
அதுக்கு இன்னொருவர்,”இதுக்கு எதுக்கு மெனக்கிடனும்.ரொம்ப சிம்பிள்பா.யாராவது இரண்டு பிரஸ்காரங்களக் குப்பிட்டு கையில் கவர் கொடுத்தாப் போதும்பா.நம்ம எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படி புகழ்ந்து எழுதிடுவாங்க.அப்புறம் வியாபாரம் பிச்சிக்கும்.”
இந்த விளம்பரம் ஒளிபரப்பான உடன் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.அனைவரும் ஒன்று கூடி வானொலிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.வானொலி உடனே விளம்பரத்தை நிறுத்தியது.மேலும் மும்பை விளம்பர நிறுவனத்தின் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.அவர்களுடன் பேசிய நேர்மையான பத்திரிகையாளர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால் உங்கள் மீது வழக்குத் தொடருவோம் என்று எச்சரிக்க நிறுவனம் உடனே இது குறித்துப் பேச மும்பையிலிருந்து தனது பிரதிநிதிகளை சென்னை பிரஸ் கிளப்புக்கு அனுப்பியது.மும்பை நிறுவனப்பிரதிநிதிகளும் சென்னை பிரஸ் கிளப் வந்தனர்.
ஆனால் இவர்கள் வருகை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர்களுடன் பெருமாளும் சிவகுமாரும் மட்டும் தனியாகப் பேசி அனுப்பி விட்டனர்.அவர்கள் சென்ற பின் தான் அவர்கள் சென்னை வந்து சென்ற விஷயமே பிற பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்தது.
மும்பை நிறுவனத்திடம் மன்னிப்புக் கடிதம் வாங்கினீர்களா? என்று அனைவரும் பிரஸ் கிளப்பில் பெருமாளிடமும் சிவகுமாரிடமும் கேட்க,அவங்க மன்னிப்புக் கேட்டாங்க,ஆனா எழுத்துப் பூர்வமாக் கடிதம் கொடுக்கல.அதுக்குப் பதிலா டிவியும் டெக்கும் கொடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க.ஈவினிங் வந்துடும்ன்னு சொல்ல,பத்திரிகையாளர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர்.
கிராமத்துல செருப்பால அடிச்சுட்டு அதுக்குப் பரிகாரமா காசு கொடுத்து சமரசமாப் போற மாதிரி,நம்மளக் கேவலமாப் பேசுன கம்பெனிக்காரன்ட்ட டிவியும் டெக்கும் வாங்கிட்டு அனுப்பிட்டீங்களே..நீங்கள்ளாம் என்ன பத்திரிகைக்காரங்க.உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா,சோத்துல உப்பு போட்டுத் திங்குறீங்களா,இல்லை வேறு எதும் திங்குறீங்களா..என்று ஆவேசப்பட்டனர்.
ஆனால் சிவகுமாரும் பெருமாளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்தனர். இதன் பிறகு தான் இருவரும் நகமும் சதையுமாக மாறினர்.
இப்பொழுது நீங்கள் சென்னை பிரஸ் கிளப் உள்ளே சென்றவுடன் வலது பக்கம் வரவேற்கிறதே அந்த டிவியும் டெக்கும் அது யார் வாங்கிக் கொடுத்தது தெரியுமா?ரிப்போர்ட்டர் எல்லாம் கவர் வாங்குறவங்க என்று கேவலமாகச் சொன்ன மும்பை விளம்பர நிறுவனம் வாங்கிக் கொடுத்தது தான்.இப்பொழுது அதில் தான் அனைவரும் நாள்தோறும் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
(மும்பை நிறுவனம் அவதூறு சொன்னதுக்கு லஞ்சமாக டிவியை வாங்கிக் கொண்டு ஆத்திரப்படாதவர்கள்,’அர்த்தத்துடன்’ அமைதி காத்தவர்கள் சக பத்திரிகையாளரும் முன்னோடியுமான ஞாநியின் முகத்துக்கு நேரான,உண்மையான விமர்சனத்தைக் கண்டு ஆவேசமடைந்து ஞாநியை வெளியேறச் சொன்னார்கள்.
அவ்வாறு ஞாநியை வெளியேறச் சொன்னவர்களிடம் மேடையில் இருந்தவர்கள் ஞாநியின் ஜோல்னாப்பையில் தான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கவர் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் ஞாநி அவர்களை இரண்டு அடி அடித்திருந்தாலும் வாங்கிக்கொண்டு கவரையும் கேட்டு வாங்கியிருப்பார்கள்.ஞாநியை சகல மரியாதையுடன் வழியனுப்பி வைத்திருப்பார்கள்.)
இது தான் சென்னை பிரஸ் கிளப் திசை மாறிய கதை.சிவக்குமாரும் அவரது அடிவருடிகளும் முழுமையாகத் தங்கள் கைப்பிடிக்குள் பிரஸ் கிளப்பைக் கொண்டு வந்த பிறகு தான் சென்னை பிரஸ் கிளப் கட்டப் பஞ்சாயத்து கூடாரமாகவும் சூதாடிகளின் இருப்பிடமாகவும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் புரோக்கர்கள் கூடும் இடமாகவும் மாறிப் போனது.அதன் பின் இன்று வரை 10 வருடங்களாக தேர்தலே நடக்க வில்லை.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.
இது பற்றி யாரேனும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் அந்த உறுப்பினரைப் பற்றி அவர் பணியாற்றும் நிர்வாகத்துக்கு மொட்டை பெட்டிஷன் அனுப்பியும் அனாமதேய கால் செய்தும் அவரைப் பிரஸ் கிளப்புக்கு வரவிடாமல் செய்து விடுவார்கள்.இதனால் நாளுக்கு நாள் போலி பத்திரிகையாளர்கள் மொய்க்கும் இடமாகவும் உண்மையான பத்திரிகையாளர்கள் வெறுக்கும் இடமாகவும் சென்னை பிரஸ் கிளப் மாறிப்போனது.
இவ்வாறு பெருமாள் உட்பட அனைவரையும் பொறுப்பில் சட்டவிரோதமாக நியமித்த சிவகுமார் கொஞ்சகாலத்தில்ஆஸ்திரேலியா பறந்து விட்டார்.செல்லும் முன் தன்னைப் போல் இதற்கு தகுதியான தன்னுடைய கூட்டாளி என்று கருதி பெருமாள் என்கிற பாரதி தமிழன் வசம் ஒப்படைத்துச் சென்று விட்டார்.
ஆனால் இன்று வரை பிரஸ் கிளப்பில் கொடுக்கப்படும் அடையாள அட்டையில் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் சிவகுமார் கையொப்பம் தான் இருக்கும்.ஆனால் அவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லை.ஆனால் இவர் தான் பாரம்பரியமிக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொதுச் செயலாளர்.
இது தான் பிரச் கிளப் திசைமாறிய கதை..!
இவ்வாறு கட்டப்பஞ்சாயத்துக் கும்பலும் குடிகாரர்களும் புரோக்கர்களும் சென்னை பிரஸ் கிளப்பை மொய்த்திருப்பதால் தான் பத்திரிகை தொழிலை மட்டுமே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஞாநியை பிளாக்மெயில் கும்பலும் கட்டப்பஞ்சாயத்து கும்பலும் நீ யார் பிரஸ் கிளப் பை பற்றி விமர்சிக்க?என்று கேள்வி கேட்டு அவரைத் தாக்க முயலும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனிக்களுக்கும் மலத்தில் மொய்க்கும் ஈக்கும் வித்தியாசம் உள்ளது.தேனீக்கள் உழைத்து வாழ்பவை.ஆனால் மலத்தை மொய்க்கும் ஈ அப்படியல்ல.பிழைப்புக்காக எதையும் செய்யது துணிபவை.
உண்மையான உழைக்கும் பத்திரிகையாளர்கள் மட்டும் கூடும் இடமாக இருந்திருந்தால் ஞாநியின் கருத்துக்கு உடன் பட்டிருப்பர் அல்லது ஆரோக்கியமாக எதிர்விவாதம் செய்திருப்பர்.ஞாநியை விரட்டிய கும்பலில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிரஸ் கிளப்பை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் கூட்டமாகும்.அதனால் தான் ஞாநியின் கருத்து ஒரு பிரச்சனையாக உருவெடுத்து எங்கே தங்களின் கழிசடைப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் மேற்கொண்டு அவரைப் பேச விடாமல் கிளப்பை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்தித்துள்ளனர்.வெளியேறாவிட்டால் தாக்குவோம் என்று கூறியுள்ளனர்.(ஆனால் ஞாநி பயப்படாமல் பதிலுக்கு எச்சரித்துள்ளார்)
அதிமுக,திமுக போன்ற கட்சிகளில் கூட உரிய காலத்தில் பெயரளவுக்காவது தேர்தல் நடத்துகின்றார்களே..ஆனால் உலகத்துக்கே அறம் போதிக்கும் பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் இல்லாமல் சீரழிந்து கிடக்கிறதே..?இந்த நிலை எப்பொழுது மாறும்.?
டாடா,மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட உரிய காலத்தில் தேர்தல் நடத்துகின்றார்களே..!
ஆனால் உழைக்கும் பத்திரிகையாளர்கள் அங்கம் வகிக்கும் சென்னை பிரஸ் கிளப் தேர்தல் நடத்தாமல்,கணக்கு வழக்குகள் பராமரிக்காமல்கடந்த 10 வருடங்களாக நாறிப்போய்க்கிடக்கிறதே..?
அது ஏன்..? இந்த இழிநிலை எப்பொழுது மாறும்..?
பாரதியார் மீது உள்ள பற்றால் தன்னைப் பெற்று,வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை வைத்த இறைவனின் பெயரான பெருமாள் என்ற பெயரையே தூக்கி எறிந்து விட்டு பாரதி தமிழன் என்று சூட்டிக் கொண்ட பெருமாள் சார்,நீங்கள் தான் சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
சென்னை பிரஸ் கிளப்பை ஒரு கும்பல் உங்கள் தலைமையில் தான் சீரழித்துக் கொண்டிருக்கிறது...
இந்த நிலையை மாற்ற முயற்சிப்பீர்களா..?
“நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..”
----பாரதியார் கவிதைகள்
பாரதி கவிதையைப் படித்து விட்டு பாரதி தமிழன் என்று பெயர் மாற்றினால் மட்டும் போதாது.
அதன் படி நடக்க முயற்சிப்பீர்களா.?
அத்தியாயம் 1 நிறைவு பெறுகிறது.அடுத்த பகுதி அதி விரைவில்...!
5 comments:
சென்னை பிரஸ் கிளப்பின் இணைச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமாள் என்னும் பாரதி தமிழனோ சம்பவம் நடைபெறும் பொழுது மன்றத்திற்கு வந்து தவறு செய்தவர்களைக் கண்டிக்காமல் கூட்டம் நடத்தியவர்களைச் சமாதானப் படுத்தி விட்டார்.//
பாரதி தமிழன் யாரையும் கண்டித்தால் தான் ஆச்சரியம்.பாம்புக்குத் தலையும்,மீனுக்கு வாலும் காட்டுவது பெருமாளுக்கு கை வந்த கலை.
அவருக்கு என்று கொள்கை ஒன்றும் கிடையாது,அனைவரையும் பகைக்காமல் அவர்களுடன் இணைந்து காரியம் ஆற்றுவதே அவருக்கு கைவந்த கலை.
திராவிட உணர்வாளர்களையும் கட்சியினரையும் பார்த்தால் வாங்க தலைவரே என்று அழைப்பார்.கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பார்த்தால் வாங்க தோழர் என்பார்,பிஜெபி,காங்கிரஸ் அனுதாபிகளைப் பார்த்தால் வாங்க ஐயா என்பார்,இதர சகாக்களைப் பார்த்தால் வாங்க பாஸு என்பார்.
இதை நீங்கள் அனுசரித்துப் போவது என்று எடுத்துக் கொண்டாலும் சரி,அல்லது கொள்கையற்ற யாரையும் அண்டிப்பிழைக்கும் பிழைப்பு வாதம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி.உங்கள் பாடு.
ஞானியின் பேச்சு நியாயமாத்தான் இருக்குது.. ஞானியை கண்டித்து குரல் எழுப்பும் அந்த வயதில் பெரிய மூத்த பத்திரிகையாளப் போராளி எந்த பத்திரிகை இந்து,தினத்தந்தி, தினமணி,தினமல்ர் இப்படி ஏதாவது பெரிய பத்திரிகையில் இருக்கிறாரா இல்லை டுபாக்கூரா ..
மணிமாறன்
ரஜினி அசதுல்லா ரெண்டுபேரும் போட்டோவுல ஏதோ சி என் என் /பி பி சி ரிப்போர்ட்டர்ஸ் ரேஞ்சுக்கு சீன் காட்றானுவளே இவனுங்கோ எந்த பிரஸ்..
அவனுக்க ரெண்டு பேரும் வெளிவராத பத்திரிகையில எழுதாத எழுத்துக்கு சீனியர் கரஸ்பாண்டெண்ட்ஸ்..
அப்புறம் அதே மாதிரி ஞாநிட்ட ஒரு கிழவன் வேகமா கேள்வி கேக்குறானே அவன் யார் தெரியுமா...
டெல்லியில் இருந்து வெளிவர்றதா சொன்ன என்ற பத்திரிகையில வேலை பார்க்குறதாச் சொல்றவன்.அந்த பத்திரிகை தமிழ்ல மட்டுமலல் இந்தி உட்பட எந்த மொழியிலும் வரல்லை.ஆனா கேள்வியைப் பார்த்தா முடியல...
குளோப் ஹாஸ்பிடலுக்கு கொஞ்ச நாள் பிஆர் ஓ வேலை பார்த்தான்.டுபாக்கூர் பெல்லொ...
அப்ப இவனுங்களையும் பத்தி விரிவா ஒரு பதிவு போடுங்க... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Post a Comment