Wednesday, 14 March 2012

தமிழன் பிணத்தைக் காட்டி இனத்தை பேசி பணம் பண்ணும் நக்கீரன்!




இன்று காலையில் நக்கீரன் இதழின் அட்டையைக் கடையில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.பிரபாகரன் மகன் படுகொலை-கதற வைக்கும் ஆதாரங்கள் என்னும் தலைப்பு நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.

பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் ஏற்கனவே வந்திருந்தாலும் கதற வைக்கும் ஆதாரங்கள் என்னும் நக்கீரனின் அட்டைப்படச் செய்தி நம்மைத் திகைக்க வைத்தது.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து இதுவரை வெளிவராத ஆதாரங்களை நக்கீரன் புலனாய்வு புடலங்காய் ஆய்ய்ய்வு செய்து வாசகர்களுக்கு அறியத் தந்துள்ள்ளார்கள் என்னும் எண்ணத்திலும் ஈழப்போரின் இறுதியில் பிரபாகரன் அவர்களின் மகனை என்னென்ன  சித்திரவதைகள் செய்தார்களோ என்பதைத் தெரியும் எண்ணத்திலும் வாங்க முடிவு செய்தோம்.

ஆனாலும் உள்மனது நம்மை உறுத்தியது.ஏற்கனவே நாம் நக்கீரனின் பொய்யும் புரட்டும் குறித்து நன்கு அறிந்திருப்பதாலும் இது குறித்து ஒரு பதிவும் வெளியிட்டிருப்பதாலும் அதிகமாக யோசித்தோம்.

http://kalakakkural.blogspot.in/2011/12/blog-post_25.html 

ஆனாலும் எவ்வளவோ பெரிய அயோக்கியர்களும் கூட மனம் மாறுகின்றார்களே!
பணத்திற்காக சமூகத்தைக் கெடுக்கும் வகையில் சாராயம் காய்ச்சி,கஞ்சா விற்பவன் கூட மனம் மாறுகின்றானே!

பசிக்காக அல்லாமல் உடம்பு தினவெடுத்து விபச்சாரம் செய்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் மனம் மாறுகின்றார்களே!

நம்ம நக்கீரன் ஆசிரியர் குழு மனம் மாறியிருக்காதா என்று அசட்டுத் தைரியத்தில் துணிந்து இதழை 10 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினோம்.

அதனைப் படித்து முடித்த பின்பு தான் எவ்வளவு பெரிய அயோக்கியனும் கூட மனம் மாறுவான்.ஆனால் நக்கீரன் மாறவே மாறாது என்று கட்டச் சுவற்றில் காறித்துப்பினோம்.ஏனென்றால் ஆசிரியர் குழு நம் அருகில் இல்லை.

இனி மேட்டருக்கு வருவோம்.

நக்கீரனில் வெளிவந்த அட்டை மேலே இருக்கிறது.ஆனால் அதைப் பார்த்துக் காசு கொடுத்து வாங்கினால் உள்ளே இதழில் இருக்கும் செய்தி இது தான்.





அட்டைப் படச் செய்திக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் சிறிதாவது தொடர்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒன்றும் இல்லை.ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானம் குறித்த ஒரு சிறு அறிமுகம்.

அதுவும் நக்கீரன் ஆய்ந்து எழுதியது ஒன்றுமில்லை.தினத்தந்தி செய்தியைப் பார்த்தும் இணையத்தில் இருந்தும் சுடப்பட்ட செய்தியை வைத்து ஒரு பக்கத்தில் அறிமுகம். மற்றும்சீமான்,நாஞ்சில்சம்பத்,சி.மகேந்திரன்,திருமாவளவன்,பொன்.ராதாகிருஷ்ணன்,வேல்முருகன் ஆகியோரிடம் ஒரு கருத்து என 3 பக்கங்கள் வாங்கி 4 பக்கங்களை ஒப்பேற்றியிருக்கின்றார்கள்.

இதில் ஊடக நெறிமுறைக்கு மாறாக இறந்த பெண் போராளிகளின் நிர்வாணமான உடல்களை வண்ணப் படங்களாக வெளியிட்டு அருவருக்கத்தக்க வணிக நோக்கத்தை தரம் தாழ்ந்து நிறைவேற்றியிருக்கிறது நக்கீரன்.

உள்ளே ஒரே ஒரு வரி பிரபாகரன் மகனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது என்று வேல்முருகன் பேட்டியில் வருகிறது.அவ்வளவு தான்.இதைத்தவிர வேறு செய்தியோ பிரபாகரன் அவர்களின் மகனின் படுகொலை குறித்தோ கதறவைக்கும் ஆதாரங்களோ ஒன்றுமில்லை.

ஆனால் அட்டையிலோ பிரபாகரன் மகன் படுகொலை-கதற வைக்கும் ஆதாரங்கள் இந்தியா?கொதித்தெழும் தமிழகம் என்று தலைப்பு.

அட்டையைப்பார்த்து நாடு முழுவதும் எத்தனை நபர்கள் இதழைக் காசு கொடுத்து வாங்கியிருப்பார்கள்?அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்?

எதற்கு இந்த ஊடக பொறுக்கித்தனம்.எதற்காக இந்தச் செய்தி?இந்தச் செய்தியை எழுதியவர் நக்கீரனின் தலைமை நிருபர் ஆர்.இளைய செல்வன் என்பவர்.(கொழும்பிலிருந்து எழில் எழுதுபவரும் இவர் தான்)செய்தியை எழுதியதைத் தாண்டி இவர் பங்கு இதில் எதுவுமில்லை.படங்களை வைப்பது அட்டைப்படத்தைத் தீர்மானிப்பது எல்லாம் இவர் கையில் இல்லை.

அதெல்லாம் நக்கீரன் ஆசிரியர் குழு முடிவு செய்வது தான்.அதற்கு ஏன் இந்த கழிசடைத்தனம்?

ஈழப்பிரச்சனையில் இனத்தை அழித்தவர்களுடன் சமரசமாகி கும்மாளமிட்ட கருணாநிதியின் நிழலில் இருந்து கொண்டு ஏற்கனவே பல துரோகங்களை எழுத்தில் பதிவு செய்த நக்கீரன்,கஸ்பரின் புனைவுகளையும் பொய்யையும் சுருட்டிக் கட்டுரைகளை வெளியிட்டுக் கல்லா கட்டிய நக்கீரன் இன்னும்  திருந்தியபாடில்லை.

இனத்தை வைத்தும் இனத்திற்காகத் தன் இன்னுயிரை இழந்தவர்களின் பொன்னுடலை வைத்தும் காசு பார்க்கிறது.உடலை வண்ணத்தில் வெளியிட்டு மாரடிப்பது போல நடித்து சக தமிழனின் பாக்கெட்டில் கையை விட்டுக் காசு திருடுகிறது.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படின்னு தலைப்பு வேற

எப்பொழுது தீரும் நக்கீரனின் பொய்யும் புரட்டும்?

நீங்க திருந்தவே மாட்டீங்க...!எவ்வளவு சொன்னாலும்.

துக்குப் பதிலா ஒன்னு செய்யுங்க.பேசாம பத்திரிகை பேரை மாத்திக்கங்க!

உங்களுக்கு சரியான தலைப்பு கிடைக்கலைன்னா நாங்க சொல்றோம்.



                                 கோயபல்ஸ்.

ஓகே?

அவர் ஆரியர் அப்படிங்குறதுன்னால ரொம்ப யோசிக்குறீங்களா?

அடுத்து ஒரு பேரச் சொல்றோம்.

எப்படியும் கண்ண மூடிக்கிட்டு சரின்னு சொல்வீங்க.



                        கலைஞர்.
ஓகே தானா?

டபுள் ஓக்கே..!டபுள் ஓக்கே!

இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.பேர மாத்திட்டா தலைவரும் சந்தோஷப்படுவாருல்ல..அதிமுக காரன் ஆபீஸ் மேல கல் வீசிட்டாலும் கலைஞர் மேல கல்வீச்சுன்னு திமுக காரன் வாசலுக்கு வந்துடுவான்ல.கல் எறியுற அதிமுக காரன் ஓடிடுவான்ல

நல்ல ஐடியாண்ணே..!வாழ்க கலைஞர் குரல்..சாரி கலகக்குரல்..

சரி தம்பி எதுக்கு இங்க கை கட்டிட்டு?நீங்க வேற நான் வேறயா?அறிவாலயம்,கோபாலபுரம் போனா மட்டும் பணிவக் காட்டுங்க தம்பி..!

சரிண்ணே..அந்த முகாம்ல ரபி பெர்னார்ட்க்கு கிடைச்சிடுச்சு..நாமும் எத்தனை வருஷமா அடிக்கிறோம்.ஒண்ணும் நடக்கல.கலைஞர் ன்னு பத்திரிகை பெயர் மாறின பின்னாடியாவது தலைவர் ராஜ்யசபாவுக்குஅனுப்புறாரான்னு பார்ப்போம் அண்ணே...


No comments: