விகடன் குழுமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் தற்பொழுது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் உதவி ஆசிரியர்கள் பொறுப்பில் இருப்பவர்களுமான பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரையும் ஜூனியர் விகடன் நிர்வாகம் பதவி இறக்கம் மற்றும் இட மாறுதல் செய்துள்ளது.
அண்ணாமலை
இதில் பி.பி.சிவசுப்ரமணியன் அவர்களை கோவை பகுதிக்கும்,அண்ணாமலையை மதுரை பகுதிக்கும் செய்தியாளர்களாக பதவியிறக்கம் செய்து இடமாறுதல் செய்துள்ளது.
ஆனால் பதவியிறக்கத்தால் சட்டரீதியாக நிர்வாகத்துக்கு பிரச்சனை வரும் என்பதால் சப் எடிட்டர் வித் ரிப்போர்ட்டர் என்ற பெயரிலும் ரூ.100 ஊதியம் உயர்வு கொடுத்தும் டெக்னிக்கலான உத்தரவினை நிர்வாகம் வழங்கியுள்ளது.(ஆர்டரைத் தயாரித்த வெளியீட்டாளர் அசோகனுக்கு நாட்டிலேயே தான் தான் அறிவாளின்னு மனசுக்குள்ள நினைப்பு)
இதில் பி.பி.சிவசுப்ரமணியன் அவர்கள் நிறைய நூல்களை எழுதியுள்ளார்.பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.மொழிபெயர்ப்பிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருபவர்.
அலுவலகத்தில் தனது உரிமைகளைப் பேசியதால் அவரைப் பழி வாங்க நினைத்த நிர்வாகம் பிழை திருத்துவதில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட சிறு பிழையைக் காரணம் காட்டி கடந்த ஒரு வருடமாக அவருக்கு பெர்மார்மன்ஸ் அலவன்சை கொடுக்கவில்லை.
இட மாற்றத்தால் இப்பொழுது மூத்த வழக்குரைஞரைச் சந்தித்துள்ள பி.பி.சிவசுப்ரமணியன் ஓரிரு நாட்களில் தன்னை கோவைக்கு இடமாறுதல் செய்ததை எதிர்த்து விகடன் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.அதன் பின் நீதிமன்றத்தில் முறையிடவும் தயாராகி வருகிறாராம்.
இட மாற்றத்தால் இப்பொழுது மூத்த வழக்குரைஞரைச் சந்தித்துள்ள பி.பி.சிவசுப்ரமணியன் ஓரிரு நாட்களில் தன்னை கோவைக்கு இடமாறுதல் செய்ததை எதிர்த்து விகடன் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.அதன் பின் நீதிமன்றத்தில் முறையிடவும் தயாராகி வருகிறாராம்.
மற்றொரு உதவி ஆசிரியரும் திரைப்பட பாடலாசிரியருமான அண்ணாமலை தன்னை மதுரைக்கு இட மாறுதல் செய்ததை எப்படி அணுகுவது?நீதிமன்றம் செல்வதா அல்லது நிர்வாகத்துக்கு தொடர்ந்து மனு போடுவதா என்று மதில் மேல் பூனையாக இருக்கிறாராம்.
6 comments:
ஊர் பிரச்சினையையெல்லாம் டமாரம் போடற விகடன்ல இம்மாம் மேட்டரு கீதா.சூப்பருமா!
இடம் மாற்றம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.நன்றி கொண்டு வந்து சேர்த்ததற்கு.
சமீபத்தில் வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில் பழைய கவர்னர் கே.கே.ஷா படத்தைபோட்டு மொரார்ஜி தேசாய் என தவறாக பேர் போட்டு இருந்தது,இதை குறிப்பிட்டு நான் எழுதிய கடித்ததையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்.இதற்க்கு எல்லாம் உதவி ஆசிரியர்கள் பொறுப்பா அல்லது நிர்வாகம் பொறுப்பா.
ஆமா, ஒருத்தர் கலக்டர், இன்னொருத்தர் IPS, இவங்கள Depromote செஞ்சி இடம் மாத்தினது தான் இன்னக்கி நாட்டில பயங்கர பிரச்சனை, இது ஒரு நியூஸ், உங்களுக்கெல்லாம் உருப்படியான, நிரந்தர வேலை சத்தியமா இல்லையா? விகடன் யாரை வேலைக்கு சேத்தா நமக்கென்ன, வேலைய விட்டு அனுப்புனா நமக்கென்ன....
இது தனிப்பட்ட ஒரு அலுவலகப்பிரச்சினை. தொழிலாளர் பிரச்சினை என்றாலும் அது ஒரு சங்கத்துடன் முடிந்துவிடுகிறது. இதை ஏன் இணையத்திற்குக் கொண்டுவந்து சேறை வாற்றி இறைத்து தமிழிணையத்தின் தரத்தையும் குறைக்கிறீர்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இங்கு வந்து பேசி என்ன ஆகப்போகிறது?
ithuvum pesa vendiya visayamthan. pagirangapadutha vendiya seithithaan.
Post a Comment