Showing posts with label தியாகு. Show all posts
Showing posts with label தியாகு. Show all posts

Monday, 4 June 2012

ஜூனியர் விகடன் –வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சமாம்...!




நல்லமாட்டுக்கு ஒரு சூடு...!

நல்ல மனிதனுக்கு ஒரு சொல்...!

இது பழமொழி..அந்தக் காலத்தில் படியாத மாட்டை படிய வைக்க கம்பியை காய்ச்சி சூடு போடும் வழக்கம்  இருந்தது. அப்படி சூடு போட்டால் அந்த மாடு சொந்தக்காரனின் வழிக்கு வந்து விடும்.அது போல நல்ல மனிதர்கள் ஏதாவது தவறு செய்தால்அவர்களை கடுமையான ஒரு சொல் சொன்னாலே அவர்கள் நல் வழிக்கு திரும்பி,திருந்தி விடுவார்கள்.இதனால் தான் நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று வழக்கு இருந்தது.

ஆனால் ஜூவிக்கு ஒரு சொல் போதாது போலும்.ஏனென்றால் தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு குறித்தும் விஜயலட்சுமி என்ற பெண்மணி குறித்தும் ஆதாரமற்று எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.நாம் அதனை வரிக்கு வரி ஆதாரப்பூர்வமாய் விமர்சித்து நமது தளத்தில் ஜூவியின் திட்டமிட்ட வன்மத்தை அவதூறை எழுதினோம்.
http://kalakakkural.blogspot.in/2012/05/2.html மேலும் ஜூவியில் தியாகுவை ஒரு நேர்காணல் செய்தும் வெளியிட்டிருந்தார்கள்.அதில் விளக்கம் சொல்லியிருந்தார்.அதன் பின்னராவது ஜூ.வி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்  என்று நம்பினோம்.

ஆனால் ஜூ.வி. திருந்துவதாக இல்லை.நேர்காணல் வெளியிட்ட பின்பு இந்த நடப்பு இதழில்(6-06-2012 தேதியிட்ட) அப்பா-மகள் உறவைக் கொச்சைப்படுத்தும் தியாகு என்ற தலைப்பில் அடுத்து ஒரு இரு பக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.இதனைப் பார்த்த பின்பு ஜூவிக்கு ஒரு சொல்லோ சூடோ போதாது என்று நன்கு உணர்ந்து கொண்டோம்.

அந்தக் செய்திப் பதிவு இது தான்.




இந்த இதழில் வெளியிட்ட செய்தியைப் பற்றிப் பார்ப்போம்.முழுக்க முழுக்க தாமரையின் பக்கம் நின்று அவர் சொன்ன செய்தியை வைத்து மீண்டும் 2 பக்கங்களை நிரப்பியது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.


1)தியாகு அமைப்பின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர் நிலவன் என்பவர்  தியாகுவின் மீது குற்றச்சாட்டு முதல் இரண்டு பத்தி வருகிறது.

2)அடுத்த பத்தி கவிஞர் தாமரை இப்பொழுது முதல் முறையாய் வாய் பகிரங்கமாய் திறந்துள்ளாராம்.(நாட்டுக்கு ரொம்ப அவசியம்..)அவர் கருத்து ஒரு பத்தி கொஞ்சம் சமாதானம் போலப் பேசினாலும்,அடுத்த பத்தியில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது.

3)அதற்கடுத்த பத்தியைக் கவனியுங்கள்.தாமரைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.//தாமரையோ இயக்கத்தில் இருக்கும் தோழர்களோ ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார்கள்.//இதைச் சொல்வது யார்..? வேறு யார்..?அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.எழுதியது உதவிப் பொறுப்பாசிரியர் ராஜா திருவேங்கடம்.தாமரையின் சுய தம்பட்டம் படிக்க ஜூவியை இளிச்சவாய வாசகன் காசு கொடுத்து வாங்க வேண்டியதிருக்கிறது.

இயக்கத்தில் இல்லாத தாமரையும்,இயக்கத் தோழர்களும் பொய் பேச மாட்டார்களாம்..ஆனால் இவ்வளவு நாள் இவர்களின் இயக்கத் தலைவராய் இருந்தவரும்,தாமரையுடன் இவ்வளவு நாள் வாழ்ந்த தியாகுவும் பொய் சொல்வாராம்.என்னடா உங்கள் லாஜிக்..?

அது சரி ஜூவி உதவிப் பருப்பாசிரியர் ஏன் தியாகுவின் நெருக்கமான வட்டாரத்தில் பேசவில்லை..? அல்லது தாமரை குறித்து திரைப்பட வட்டாரங்களில் பேசவில்லை...?என்ன ரேட்டுப்பா உங்க இதழியல் தர்மம்...(கவர் வாங்குறது மட்டும் தான் குற்றம்.மற்றதெல்லாம் தப்புல அடங்காதுங்க சார்..பெரிய பட்டியல் இருக்குது)

4)இறுதிப் பகுதியைக் கவனியுங்கள் ஜூவியின் முடிவுறாத வன்மம் புரியும்.

தியாகுவின் மகளும் வழக்குரைஞருமான சுதா காந்தி குறித்து எழுதப் பட்டுள்ளது.சுதா காந்தி சென்னை உயர் நீதிமன்றத்திலும் நிறைய கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராகப் பணிபுரிகிறார் என்று அறிகிறோம்.

நம் கேள்வி இது தான்.வழக்குரைஞர் சுதா காந்தி ஒருவரைக் காதலிக்கிறார்,அந்தச் செய்தி உண்மை என்றே வாதத்திற்காய் வைத்துக் கொள்வோம்.

யாரைக் காதலிக்க வேண்டும்,யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட முடிவு.இதில் ஜூவி க்கு என்ன வேலை...?வழக்குரைஞருக்கு முடிவெடுக்கத் தெரியாதா..?

அதில் எதும் சிக்கலோ,பிரச்சனையோ ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க அவரது தாய் தந்தை இருக்கிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது..?

வழக்குரைஞர் சுதாகாந்தியின் காதலையும் பிரச்சனையையும் ஜூ.வி. தனது இந்தச் செய்திப் பதிவில் வாசகனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று என்ன  அவசியம்..?

இது தான் புலனாய்வு புடுங்கிகளின் வேலையா..?அருவருப்பாக இல்லையா உங்களுக்கு..?

நாட்டில் எத்தனை அரசியல் குடும்பங்கள் இருக்கிறது..?அவர்களின் வீட்டில் நடப்பதை எல்லாம் இப்படி பெயர் போட்டு எழுத ஜூ.வி.க்குத் துப்பு இருக்கிறதா..?

ஒரு சாதாரண வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலே பயந்து போய் ஒன்னுக்கிருந்து அடுத்த இதழில் ஜூவி மன்னிப்பு வெளியிடுவதை உலகம் அறியும்..

ஆனால் ஜூவி தொடர்ச்சியாக தியாகு,அவரது மகள்,விஜயலட்சுமி என்ற பெண்மணி எனத் திட்டமிட்டு வன்மத்துடன் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.


தியாகு தலைமையேற்றுள்ள அமைப்பில் எத்தனை நபர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்..?.அது ஒரு மிக மிகச் சிறிய அமைப்பு.தேர்தலில் அந்த அமைப்பு போட்டியிடுவது இல்லை.அந்த அமைப்பில் பணியாற்றுபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் 20 நபர்கள் இருப்பதே அதிகம்.பொதுச் செயலாளர் தியாகுவைத் தாண்டி அந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரையும் ஜூ.வி. வாசகனுக்குத் தெரியாது.அவர் நடத்தும் அமைப்பின் பெயர் கூட ஜூ.வி. வாசகனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.ஆனால் அந்த அமைப்பு குறித்துத் தான் லட்சக்கணக்கில்(இப்ப சர்க்குலேஷன் குறைஞ்சிடுச்சு.1-3/4 லட்சம் தான் போகுதாம்..) விற்கும் இதழில் கடந்த மூன்று வாரங்களில் இதுவரை 9-1/2 பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏன்..?எதற்கு..? இவ்வாறு தியாகு மீது ஜூ.வி. வன்மத்துடன் கடித்துக் குதறுவதற்கு என்ன அவசியம்..?

இது ஹை-லெவல் பெய்டு மேட்டரா..?இல்லை தாமரை சார்பில் பஞ்சாயத்து பேசும் ஒரு அரசியல் கட்சிப் பொதுச் செயலாளர்(ஜூ.வி.யில் இவரது ஆதிக்கம் மிக அதிகம்.இவர் நினைத்தால் தான் இருமியதைக் கூடச் செய்தியாக்க முடியும்.) ஆசைப்படி இந்தச் செய்தி வெளியிடப்படுகிறதா..?அல்லது தாமரையின் நண்பர்கள் யாரும் ஜூவியில் இருந்து கொண்டு செய்தியைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்களா..?அல்லது தியாகு காணவில்லை என்று முதலில் வெளியிட்ட தவறான ஒரு பக்கச் செய்தியை நியாயப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியாய் எதிர்ச் செய்தியாய் வெளியிட்டு தங்கள் தவறினை நியாயப்படுத்த முயல்கிறதா ஜூ.வி..?

இந்த விஷயத்தில் நடப்பது எதுவும் சற்று புரிபடாமல் தான் இருக்கிறது.எதுவாக இருப்பினும் ஜூ.வி.க்கு நாம் சொல்ல ஒன்று இருக்கிறது.

இப்படி விஜயலட்சுமி,தியாகு,சுதா காந்தி போன்றவர்கள் குறித்து அந்த வட்டாரத்தில் பேசினோம்,இந்த வட்டாரத்தில் பேசினோம் என்று அலுவலகத்தில் அமர்ந்து கோடம்பாக்கம் கவிஞர் வீட்டிற்கு தொலைபேசியில் பேசி திட்டமிட்டு அவதூறினைச் செய்தியாக உருமாற்றி வெளியிடுவதற்குப் பதில் இன்னொன்று செய்யலாம்.

ஜுவியில் முதலாளியில் இருந்து கடைக்கோடி நிருபர் வரை அனைவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை எழுதலாம்.சீரியல் நடிகை,ஈசிஆர் ரிசார்ட்,அந்தமான் கும்மாளம்,அலுவலகத்திலேயே அடி வாங்கியது என கிளுகிளுப்பு,சுவாரசியம்,ஏமாற்றம் கலந்து எழுத எழுத பக்கங்கள் காணாது,கன்னித் தீவு கதை போல இடையறாது வெளிவந்து கொண்டிருக்கும்.விற்பனையும் அதிகரிக்கும்.பக்கங்களையும் கஷ்டப்படாமல் நிரப்பலாம்.

செய்யுமா ஜூ.வி..?தமிழ் மக்களின் நாடித் துடிப்பாம்.வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சமாம்...த்தூ......







Monday, 28 May 2012

நக்கீரன் கோபால்,ஜுனியர் விகடன் அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை..?

தாமரை தியாகு
                       
ஜூனியர் விகடன்,நக்கீரன் என்கின்ற இரண்டு புலனாய்வுவுவுவு,புடலங்காய்ய்வு இதழ்கள் நாட்டில் நடக்கும் தவறுகளையும் முறைகேடுகளையும் புலனாயாமல் அதனை அம்பலப்படுத்தாமல் பரபரப்பிற்காகவும் இதழ் விற்பனைக்காகவும் அப்பொழுதைக்கு அப்பொழுது தனி நபர்கள் குறித்துச் செய்தி வெளியிடுவது வழக்கம்.ஆட்களின் தன்மையைப் பொறுத்து இந்தச் செய்தியின் காரமும் தரமும் தராதரமும் இருக்கும்.

செய்திக்கோ அல்லது தவறான செய்திக்கோ பதிலுக்கு வழக்குரைஞர் நோட்டீசோ,அல்லது ஆட்டோவோ வரும் என்று தெரிந்தால் அதற்குத் தகுந்த மாதிரி செய்தி அடக்கி வாசிக்கப்படும்.சில நேரங்களில் கிசுகிசுவாகவே செய்தி கடந்து விடும்.உண்மைச் செய்தி என்றாலும் சில நேரங்களில் பயந்து கொண்டு குப்பைத் தொட்டியில் போய் விடும்.

அதே நேரம் செய்தி வெளியிடப்படும் நபர் எதையும்கேட்க மாட்டார் என்றால் வரிந்து கட்டி வெளியிடுவார்கள்.இதுதான் இவர்களின் வீரம். இதற்கு தற்பொழுது பலியாகியிருப்பவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் விஜயலட்சுமி என்னும் ஒரு பெண்மணி.

தியாகுவின் கொள்கைகள் மீதும் அவரது அரசியல் பாதைகள் மீதும் உங்களுக்கும் எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கலாம்,முரண்பாடுகள் இருக்கலாம்.அது வேறு.

ஆனால் தியாகு என்ற தனிமனிதரின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்களிடம் ஊடகம் இருக்கிறது.அதனைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதற்கு இளிச்சவாய வாசகன் இருக்கிறான் என்பதற்காக ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளித் தெளிப்பது பத்திரிகை அறம் அல்ல.நடப்பதும் கற்காலம் அல்ல.பதில் சொல்லியாக வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கிறது.

னி நடந்தவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஜூனியர் விகடன் புலனாய்வு..





இந்தக் கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.முதலில் இந்தக் கட்டுரை இப்பொழுது வெளியிடப்பட்டதற்கு என்ன தேவை இருக்கிறது..?

1)தியாகு தன்னைத் துன்புறுத்தினார் என்று திரைப்பட பாடல் ஆசிரியர் தாமரை காவல்துறையில் புகார் செய்துள்ளாரா…?

2)அல்லது பெண் விடுதலைக்காய் போராடும் அமைப்புகளிலோ,மனித உரிமை அமைப்புகளிலோ எழுத்துப் பூர்வமாக தாமரை புகார் செய்துள்ளாரா?

3)அல்லது குறைந்த பட்சம் தான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்திலாவது புகார் செய்துள்ளாரா?

4)தியாகு ஒரு வாரமாகக் காணவில்லை என்று சொல்லி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின்றீர்களே..? இந்தச் செய்திக்கு என்ன தேவை..?

தியாகு இந்த நாட்டின் முதல்வரா..?அல்லது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசுப் பொறுப்புக்கள் எதிலும் பதவி வகிக்கிறாரா..?தியாகு காணவில்லை என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுவதற்கு..

5)தியாகு ஒரு கட்சியின் தலைவர் என்ற அர்த்தத்தில் செய்தி வெளியியிட்டிருக்கின்றோம் என்று ஈனஸ்வரத்தில் ஜால்ஜாப்பு சொன்னீர்கள் என்றால்,இது வரை தியாகுவின் கட்சிக் கூட்டம் எத்தனையை உங்கள் இதழில் பதிவு செய்துள்ளீர்கள்..?

6)தியாகு காணாமல் போனது தொடர்பாகவோ அல்லது தியாகு ஏதாவது பெண்ணைக் கடத்தி விட்டார் என்றோ ஏதாவது காவல் நிலையத்தில் வேறு ஏதாவது புகார் பதிவாகியிருக்கிறதா..?

7)இது எதுவும் கூட வேண்டாம்.ஜுவி நிருபரிடமாவது திரைப்பட பாடலாசிரியர் தாமரை,தியாகு என்னை அடிக்கிறார்,மிதிக்கிறார் என்னை அவரிடமிருந்து மீட்டுச் செல்லுங்கள் என்று தகவல் அனுப்பினாரா…?

எதும் புகார் பட்டியல் வாசித்தாரா..?அதுவும் இல்லை.நான் எதுவும் உங்களிடம் சொல்லும் நிலையில் இல்லை என்று தான் செய்தியில் சொல்கிறார்.

இல்லை.இல்லை.எதுவும் இல்லை.அப்புறம் எதற்கு இந்தச் செய்தி வெளியிடப் பட வேண்டும்.என்ன தேவை இருக்கிறது..?ஒரு தேவையும் இல்லை.ஊடகம் நடத்துபவர்கள் செய்தி அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும்,தங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும் தாங்கள் நினைத்தால் பக்கங்களை மையில் நிரப்பி யாரையும் செய்தியாக்கலாம், இழிவு படுத்தலாம்.அப்படித்தானே..?


  • இனி இந்தச் செய்தியில் உள்ள பிழைகளையும் தவறுகளையும் பார்ப்போம்.


ஒரு நாடறிந்த பிரபல்யம்,எழுத்தாளர் பற்றி எழுதும் பொழுது குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களையாவது பிழையில்லாமல் எழுதுவது தான் அறிவார்ந்த பத்திரிகையாளர் குணம். இங்கு எல்லாம் தலைகீழ்.

1)முதலில் தியாகு ஏதோ நாகப்பட்டிணம் கிராமத்தில் இருந்தே வர்க்கப் போராளியாகவே பிறந்து வளர்ந்தவர் என்பது போல செய்தி எழுதப்பட்டுள்ளது.




தியாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் தனது அரசியல் பாலபாடத்தைத் தொடங்கியவர்.ஜெயகாந்தன்,கண்ணதாசன்,கருப்பையா மூப்பனார்,காமராஜருடன் கூட நிறையக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த அடிப்படைச் செய்தி கூடத் தெரியாமல் ஒருவரைப் பற்றி எழுதுவதை எந்த லட்சணத்தில் சேர்ப்பது?





2)தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் சகோதரியை என்று எழுதியுள்ளார்கள்.//

தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் மகளை,சகோதரியை அல்ல.மகளுக்கும் சகோதரிக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னய்யா ஜர்னலிசம்?.

ஜூனியர் விகடனில் தியாகு எழுதிய சிறைக்குள் சித்திரங்கள் தொடரிலேயே மேற்கண்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் நமக்குரொம்பத் தூரம்.டெஸ்க் ஜர்னலிசத்தையாவது உருப்படியாப் பண்ணுங்க..

3) முதல் மனைவியிடமிருந்து அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். //

சட்டபூர்வமாகப் பிரிந்து விட்டனர் என்பது ஜூவி துப்பறியும் படைக்குத் தெரியுமா..?விவாகரத்து ஆணையின் நகல் கைவசம் இருக்கிறதா..?

4)தாமரைக்கும் இது இரண்டாவது திருமணம்././

தாமரையும் தியாகுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஜூவிக்குத் தெரியுமா..?ஆதாரம் வெளியிடுமா..? தாமரையிடம் கேட்டால் கூடக் கிடைக்காது..ஏனென்றால் சட்டப்படி திருமணம் நடக்கவில்லை.இருவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து வாழ்கிறார்கள்.அவ்வளவு தான்.


5)தியாகுவிற்கு போன் செய்தோம்.அதனையும் தாமரை தான் எடுக்கிறார்.//இதற்கு மேல் என்ன வேண்டும்?ஒருவரின் தொலைபேசியை இன்னொருவரிடம் விட்டு விட்டா ஒடிப்போவார்.?இங்கு தான் பூனைக்குட்டி ஒளிந்துள்ளது என்பது அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.

நாட்டில் உள்ள எழுத்தாளர்களையும் திரைப்படக்காரர்களையும் கேட்டுப் பாருங்கள்,ஏன் திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் தாமரையைக் கூடக் கேட்டுப்பாருங்கள்.எழுத்துப் பணிக்காக ஒரு வாரம் என்ன மாதக்கணக்கில் கூட யாரிடமும் சொல்லாமல் தனிமையில் இருப்பவர்கள் அநேகம்.
ஆனால் கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து முரண்பாடுகளை மூட்டையாக்கி செய்தி வெளியிட்டது ஜுவி.

மேற்கண்ட செய்தி 23-05-2012 தேதியிட்ட இதழில் வெளிவந்தது. இதழ் வெளியானது 19-05-2012 சனிக்கிழமை.

தியாகு வந்து சொன்னால்தான் உண்மை தெரியும்!//இது ஜூவியின் செய்தி இறுதி வார்த்தைகள்.




இந்த இதழ் கடைக்கு வந்த அன்றே காலையில் 10 மணி அளவில் சென்னையில் தமிழ்நாடு மக்கள் பேராயம் என்னும் ஒரு அமைப்பு ஸ்டெர்லிங் சாலையில் நடத்திய இலங்கை தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில் தியாகு கலந்து கொண்டார்.அதன் பின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டார்.





அது தொடர்பான செய்தி மக்கள் தொலைக்காட்சியிலும்,மாலை தமிழ் முரசு செய்தித்தாளிலும் மறுநாளைய தினமணி நாளிதழிலும் வெளியாகி உள்ளது.இணையத்தில் நிறையப்பேர் இது குறித்து செய்தி எழுதி உள்ளனர்.எந்த வழியிலாவது ஜூவி புடலங்காய்களுக்கு செய்தி தெரியாமல் இருக்காது.
*

ஜுனியர் விகடன் அடுத்த இதழ் முடிக்கப்பட்டது 21-05-2012 திங்கள் கிழமை மாலை 7 மணி.இடையில் சனி,ஞாயிறு,திங்கள் என முழுதாக 3 நாட்கள் இருக்கின்றன.

துளியளவாவது நேர்மை இருந்தால் நாணயம் இருந்தால்,அறம் இருந்தால் மனச்சாட்சி இருந்தால் ஜூனியர் விகடன் என்ன செய்திருக்க வேண்டும்?ஒரு வரியிலாவது மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.அல்லது பாலோ அப் வெளியிட்டிருக்க வேண்டும்.போகிற போக்கில் சமாளிப்பாக மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எதையாவது 4 வார்த்தையாவது எழுதியிருக்கலாம்.

(போட்டி இதழான குமுதம் ரிப்போர்ட்டர் தியாகுவின் பேட்டியை வெளியிட்டது.)





நேர்மையான பத்திரிகையாளன் என்றால் வெளியிட்ட தவருக்கு வருத்தம் தெரிவிப்பான்,அல்லது விளக்கம் தெரிவிப்பான்,அல்லது குறைந்தபட்சம் சமாளிப்பான்.வெறும் பத்திரிகையாளன் என்றால் செய்த தவறை மூடி மறைத்து எதிராளி மீது அடுத்த சேற்றை வாரி இறைப்பான்.

ஜூவியில் நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று வாசகர்கள் நம்புகிறார்கள்.அது தவறு என்பது இதழைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது.

தியாகு சென்னையில் தான் இருக்கிறார் என்ற செய்தியோ மறுப்போ,விளக்கமோ அப்படி எதுவும் வெளியாகவில்லை.இத்தனைக்கும் தியாகு மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்ததாக ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்.

தியாகுவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.அவர் போன் எடுக்கவில்லை,பதில் தந்தால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற அளவில் கூட செய்தி இல்லை.

நாட்டில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைக்கு எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று கூச்சநாச்சமில்லாமல் உரிமை கொண்டாடும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் இதற்கு ஒரு வரி விளக்கம் கூட வெளியிடவில்லை.
-------

ஆனால் ”அர்த்தமுள்ள”அமைதி கடைபிடிக்கப்பட்ட அந்த இதழுக்கு அடுத்த இதழ் அதாவது தியாகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 7 நாட்கள் கழித்து 26-05-2012 சனிக்கிழமை கடைக்கு வந்தது.இதில் தான்.அதிக முக்கியத்துவம் அளித்து 3 ½ பக்கங்களில் வண்ணத்தில் தியாகு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.செய்தியை நன்கு கவனித்தால் அதிக இடப்பரப்பில் சிரத்தையுடன் கூடிய வடிவமைப்பு,விசாலமான லே அவுட்டில் செய்தி வண்ணத்தில் வெளிவந்துள்ளது தெரியும்.(இதே அளவு வார்த்தைகள் கொண்ட கட்டுரை வழக்கமாக 2 பக்கங்களில் முடிக்கப்படும்.)








இதில் உள்ள கிரிமினல் தவறுகளைப் பார்ப்போம்.


  • செய்தி தொடக்கப் பத்தியைக் கவனியுங்கள்.தாமரையின் பக்கம் நின்று எழுதப்பட்டது என்பது விளங்கும்.முதல் பத்தி மட்டுமல்ல.முழுப் பதிவும் அப்படித்தான்.இடையில் ஒரு பத்தி மட்டும் தியாகுவிற்கு ஆதரவாய் இருக்கிறது.நடுநிலை மருந்துக்கும் காணோம்.


மொத்த வார்த்தைகள் 740.இதில் தியாகுவுக்கு எதிர்ப்பான கருத்துக்கள் 500 வார்த்தைகள்.

இதில் குறித்த இந்தப் பகுதியை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் விஜயலட்சுமி என்னும் பெண்மணியின் மீது அவரது கணவர் நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.அதை தள்ளி வைத்து விட்டு படியுங்கள்.



தியாகு மீது விஜயலட்சுமியின் கணவர் சொன்ன குற்றச்சாட்டு இதுதான்.இதற்கு எதும் ஆதாரம் இருக்கிறதா..?நாடறிந்த ஒருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது இப்படித்தான் யார் என்ன சொன்னாலும் அதனை வெளியிடுமா ஜூவி..?

நாளையே நம்ம சீனி (அதாங்க சன் ஆப் பாலு)குறித்து யார் ஒரு புகார் சொன்னாலும் விபரம் கேட்காமல் துளி ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிடுமா ஜூவி..?


  • தனக்கு தியாகு தூண்டுதலின் பேரில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக முன்னாள் கணவர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.இது பொய் என்பது அடுத்த பத்தியில் புரியும்.தியாகுவின் வீட்டில் இது குறித்து 3 மாதங்களாக பிரச்சனை இருக்கிறது என்று எழுதி விட்டு ஆனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி 8 மாதங்கள் ஆகிறது என்கிறார்கள்.இதில் முரண்பாடு இருக்கிறதா இல்லையா..?
  • அடுத்த பத்தியைக் கவனியுங்கள்.ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இப்பொழுது அது விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அதற்குத்தான் விஜயலட்சுமியும் தியாகுவின் மகளான வழக்குரைஞர் சுதாகாந்தியும் வந்துள்ளனர்.புகைப்படத்தைப் பார்த்தால் அங்கு எடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.


நம் கேள்வி இது தான்.
  • கணவன் மனைவி இருவரும் உறவில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி குற்றம் சொல்லலாம்.அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.தார்மீக ரீதியில் மட்டுமல்ல,சட்டப்படியும்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்மணியான விஜயலட்சுமி ஜூவியிடம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியுள்ளார்.ஆனால் கொடுமைக்கார கணவனான சண்முகசுந்தரத்திடம் இருந்து விஜயலட்சுமி விவாகரத்து கோரியுள்ள சண்முகசுந்தரம் தியாகு மற்றும் விஜயலட்சுமி மீது குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அவதூறுகளை சொல்லியுள்ளார்.
  • விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி ஊடகத்தில் தரக்குறைவாய்க் குற்றம் சொல்ல தார்மீக அடிப்படையில் மட்டுமல்ல,சட்டப்படியும் உரிமை இல்லை. இது ஜுவி ஆசிரியர் குழுவுக்குத் தெரியுமா..?

அதுவும் தியாகு மீது அவர் தெரிவித்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு ஜூவி மீது மட்டுமல்ல சண்முகசுந்தரத்தின் மீதும் தனி வழக்கே தாக்கல் செய்ய முடியும் என்பது ஜூவிக்குத் தெரியுமா..?



100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டாலும் சரி.பல பெண்களைக் கற்பழித்த குற்றச்சாட்டு உள்ளவரானாலும் சரி,நாட்டை அடகு வைத்த குற்றம் என்றாலும் சரி குற்றம் சாட்டப் பட்டவரின் கருத்தை வாங்கிப் பதிவு செய்வது தான் ஜூவியின் வழமை.அல்லது வழக்குரைஞரைத் தொடர்பு கொண்டு கருத்து வாங்கி வெளியிடுவார்கள்.

அல்லது

குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் தொடர்பில் வரவில்லை.அவர் கருத்துச் சொன்னால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற குறிப்புடன் செய்தி வெளியிடப்படும்.

இங்கோ தியாகுவின் மகள் எங்கள் தந்தை தலைமறைவாக வில்லை.நீங்கள் தொடர்பு கொண்டால் கிடைப்பார் என்று சொல்லியும் ஜூவி நிருபர் படைகள் தியாகுவைத் தொடர்பு கொள்ள துளியும் அக்கறை காட்டவில்லையே…ஏன்..?

ஜூவிக்கு என்ன உள் நோக்கம்..? அல்லது முதல் பதிவில் செய்த தவறை நியாயப்படுத்த அடுத்தடுத்து தவறு செய்கிறதா..?

  • சுருக்கமாகச் சொன்னால் நடந்தது இதுதான்.

முதல் இதழில் தியாகு காணவில்லை என்று அவதூறுச் செய்தி.செய்தி வெளியான அன்று பொது நிகழ்ச்சியில் தியாகு கலந்து கொண்ட பின்னும் அடுத்த இதழில் மறுப்போ விளக்கமோ இல்லை.

அதற்கடுத்த இதழிலோ அதி முக்கியத்துவத்துடன் முந்தைய செய்தியை மேலும் மிகைப்படுத்தும் வண்ணம்ஆதாரமற்ற ஒரு செய்திப்பதிவு.அதிலும் தியாகுவின் தரப்புக் கருத்து வெளியிடப்படாமல்.

  • இது தானா தமிழர்களின் நாடித்துடிப்பான ஜூவியின் யோக்கியதை?

அனைத்து ஊடகங்களுடனும் இணக்கமாக நடந்து கொள்பவர் தான் தியாகு.குமுதம் ரிப்போர்ட்டரில் தனது கருத்தினையும் விளக்கத்தினையும் தியாகு பதிவு செய்துள்ளார்.அவர்களால் அணுக முடிந்த பொழுது ஜுவியினால் ஏன் முடியவில்லை..?(தியாகுவைக் காலி செய்ய வேண்டும் என்று எதும் தனி அசைன்மெண்ட்டா..)

ஜு.வி. க்கும் தியாகு எதிரானவர் அல்ல.நிறுவனர் பாலசுப்ரமணியன் காலத்தில் இருந்தே நெருக்கமானவர்.ஜூவியில் சுவருக்குள் சித்திரங்கள்,கம்பிக்குள் வெளிச்சங்கள் என இரண்டு தொடர்கள் எழுதியுள்ளார்.அதனை ஜூவி விற்று நன்கு காசு சம்பாதித்தது.சில வாரங்களுக்கு முன்பு கூட நானும் விகடனும் என்ற கட்டுரையில் நிறுவனர் பாலசுப்ரமணியன்,பதிப்பாளர் அசோகன் உட்பட பலரையும் அதிக அளவு பாராட்டித் தள்ளினார்.

  • அந்தப் பாராட்டின் இறுதிப்பகுதி இதுதான்.

தமிழீழம் என்றாலும், தாய்த் தமிழ் என்றாலும் விகடன் ஆற்றி வருவது ஒரு வகைச் சிறை மீட்புப் பணியே. அந்தப் பணியில் என் போன்ற எளியவனுக்கும் ஒரு பங்கு தந்துள்ள விகடனுக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள முடியாது. வேலை இன்னும் மிச்சம் உள்ளதே!''

தியாகு உச்சி முகர்ந்து பாராட்டிய விகடன் தான் இப்பொழுது தியாகு நன்றி சொல்ல புதிய செய்தியை உலகுக்குத் தெரிவித்துள்ளது.

இனி நக்கீரன் யோக்கியதைக்கு வருவோம்.






சொன்னா நம்ப மாட்டீங்க என்னும் கிசுகிசு பகுதியில் முதலில் ஒரு கிசுகிசுவை வெளியிட்டது நக்கீரன்.இதைப் பார்த்து விட்டுத்தான் ஜூவி விரிவாக ஒரு அவதுறை வெளியிட்டது.

அதற்கடுத்த இதழில் நக்கீரன் தனது ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் முலம் ஒரு செய்திப் பதிவை வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க விஜயலட்சுமியின் கணவர் சண்முகசுந்தரம் தரப்புக் கருத்தினைப் பதிவு செய்து விட்டு தியாகு கருத்து அளித்தால் வெளியிடத் தயாராய் இருக்கிறோம் என்று இரண்டு பக்கச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.தாமரை காத்திருக்கிறார் என்ற வார்த்தைகளின் படி செய்தியின் மூலத்தை நாம் அறிய முடிகிறது.

ஏறத்தாழ ஜூனியர் விகடனுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் நக்கீரனுக்கும் நாம் எழுப்பிய கேள்விகள் தான்.எத்தனை கேள்வி கேட்டால் என்ன ?செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

  • ஆனால் நக்கீரனுக்கு கூடுதல் கேள்வி ஒன்று இருக்கிறது.

இந்தச் செய்தியை எழுதியுள்ள ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் தன்னைப் போல பிறரையும் நேசித்து விட்டார் என்று நினைக்கிறோம்.

ஜீவா தங்கவேல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே திருமணமாய்க் குழந்தையும் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார்.அதற்குப் பிறகு தான் அந்தப் பெண்மணி அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.அதே போல இப்பொழுது தியாகுவையும் நினைத்து இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கலாம்.மேலும் தியாகுவுக்கு எதிராய் இப்பொழுது கட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள மோகன்ராஜ் ஜீவா தங்கவேலின் அறைத் தோழர்.வாரம் இருமுறை மது விருந்தில் பங்கேற்பவர் என்றும் ஈரோட்டில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன..எல்லாம் சேர்ந்து இந்தச் செய்தி வெளிவந்திருக்கும் என நம்ப இடமிருக்கிறது.




  • இனி இறுதிப் பகுதி.....


நக்கீரன்,ஜூனியர் விகடன் பத்திரிகை அன்பர்களே
பத்திரிகை அறம்,இதழியல் தர்மம் எல்லாம் விட்டு விடுங்கள்.அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது.மீறி நாம் கேட்டால் கிலோ என்ன விலை..?அது எந்தக் கடையில் கிடைக்கும் என்று நீங்கள் வினவக் கூடும்..!

8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ள ஒரு பெண்மணியை பொது வெளியில் நடமாடும் நபருடன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்புபடுத்தி எழுதுவது தான் இதழியல் ஜனநாயகமா..?அறமா..?

செய்தி வெளியாக உண்மைத்தன்மை வேண்டாம்.நிருபரையோ அல்லது ஆசிரியர் குழுவில் உயர் பொறுப்பில் யாரையும் தெரிந்திருந்தால் போதுமானது,நாம் நினைத்த செய்தி நினைத்தபடி வந்துவிடும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.


தியாகு கருத்து எதுவும் இல்லை.தாமரை கருத்து எதுவும் இல்லை.குறிப்பிட்ட பெண்மணி விஜயலட்சுமி கருத்து எதும் இல்லை.ஆனால் சண்முகசுந்தரத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியான பதிவுகள் இரண்டு இதழ்களிலும்.

தியாகுவின் முதல் மனைவி தாமரையின் நட்பு வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு,” என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்று சொல்கிறார் என்று எழுதும் ஜுவி..?ஏன் தாமரையின் முதல் கணவர் தியாகுவின் நட்பு வட்டாரத்தில் தொடர்பு கொண்டு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று சொல்கிறார் என்று எழுதவில்லை.?


  • ஒரு நாள் பரபரப்பிற்காக எழுதி விற்று விட்ட நக்கீரனும் ஜுவியும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்..?ஏற்கனவே கணவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி தனது எதிர்காலத்தை இனி எப்படி முடிவு செய்ய முடியும்>?

அவரது எதிர்காலம் இனி என்ன ஆகும்//?இந்த இட்டுக்கட்டிய செய்தியைப் பார்த்த பின்பும் அவருக்கு இனி ஒரு மகிழ்வான திருமண வாழ்வு அமையுமா..?


நாம் உண்மையை எழுதச் சொல்கிறோம்.தியாகுவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பிற்கு இரு இதழ்களும் எதும் ஆதாரம் காட்ட வில்லை.இவர்கள் மேற்கோள் காட்டுவது என் கணவர் கொடுமைக்காரர்,காமுகர்,அவரிடமிருந்து விவாகரத்து தாருங்கள் என்று யாரை நீதிமன்றத்தில் விஜயலட்சுமி குற்றம் சாட்டினாரோ அந்த சண்முகசுந்தரத்தின் வார்த்தைகள் தான்.

எழுதியவற்றில் ஆதாரம் இல்லாத பட்சத்தில் எதை எழுதினாலும் அது தவறு தான். ஜூவி,நக்கீரன் ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்கள் என்றாலும் இப்படித்தான் ஆராயாமல் செய்தி வெளியிடுவார்களா..?
  • சீனி சன் ஆப் பாலு மீதோ அல்லது கோபால் மீதோ யாரும் குற்றம் சாட்டினால் இப்படித்தான் செய்தி வெளியிடுவார்களா..?

  • இதற்கு என்ன தான் தீர்வு..?எதும் கிடையாதா..?


தியாகு தரப்பில் விசாரித்தோம்.

தியாகு சாதாரணமானவர் அல்ல.உச்சநீதிமன்றத்தின் கற்றறிந்த வழக்குரைஞரை விட அதிக அளவில் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.அவர் இரண்டு பத்திரிகைகளின் அவதூறுகளைச் சட்டப் படி விரைவில் எதிர்கொள்வார் என்று அவர் தரப்பில் நமக்குச் சொல்லப் பட்டது.செய்தி குறித்து அவர் தரப்பில் விளக்கத்தையோ,பதிலையோ கேட்டு அணுகாவிட்டால் நீதிமன்றத்திற்கு பதிப்பாளர்,ஆசிரியர் குழுவையே வர வைப்பார் என்றும் சொல்லப்பட்டது.
  • சரி சட்டம் என்ன சொல்கிறது..?
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஒருவரிடம் வினவியபொழுது அவர் சொன்ன கருத்து இது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு பிரிவு 502 என்ன சொல்கிறது என்றால்...

Sale of printed or engraved substance containing defamatory matter
Whoever. sells or offers for sale any printed or engraved substance containing defamatory matter, knowing that it contains such matter, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both/


இதன்படி அவதூறுச் செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன்,நக்கீரன் இதழ்களின் மீது தியாகு அல்லது விஜயலட்சுமி ஆகியோர் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பலாம்.அதன் பின்பும் மேற்கண்ட இதழ்கள் மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க வில்லை என்றால் நக்கீரன் பதிப்பாளர்,ஜூனியர் விகடன் பதிப்பாளர் ஆகியோர் தொடங்கி செய்தி எழுதிய நிருபர் வரை அனைவர் மீதும் வழக்குத் தொடுத்து மான நஷ்ட ஈடு கோரலாம்.

       கோபால்-நக்கீரன் பதிப்பாளர்.

   அசோகன்-ஜுனியர் விகடன் பதிப்பாளர்.


தொடரப்படும் வழக்கில் இவர்கள் வெளியிட்ட செய்தி அவதூறு என்று உறுதிப்படுத்தப்பட்டால் பதிப்பாளர் தொடங்கி,அச்சிட்டவர்,செய்தி எழுதிய நிருபர் வரை அதிகபட்சமாய் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இவர்கள் எழுதிய செய்திக்கு வருத்தம் தெரிவிப்பார்களா..? இல்லை.....