![]() |
| சுகிதா |
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து பீர் முகம்மதுவும் சேட்டன் பிரேம்சங்கரும் நீயா பண்ணினா ராஜினாமா..! நான் செய்தால் டிஸ்மிஸ் என்னும் எச்சரிக்கையின் அடிப்படையில் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டது குறித்த பின்னணி அடுத்த பதிவாக வெளிவரும்.
![]() |
| பீர்முகம்மது |
அதே வேளையில் புதிய தலைமுறையில் பிரேம்சங்கர் கோஷ்டியில் இருந்து கொண்டு அதிகாரத்திலும் ஆட்டத்திலும் கொடி கட்டிப் பறந்த மகாலிங்கம் மற்றும் குழுவினர் கடும் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.எதும் சரியான வாய்ப்புக் கிடைத்தால் மடத்தைக் காலி செய்யும் திட்டத்திலும் உள்ளனர்.
புதிய தலைமுறையில் நியூஸ் (operation ) பொறுப்பேற்றுக் கொண்ட ஷண்முகசுந்தரம்..((இவருக்கு தமிழ் எழுத்தான ச பிடிக்காதாம்.வட நாட்டு ஷ தான் பிடிக்குமாம்.ஷங்கர் மாதிரி ஷண்முகசுந்தரம்.என்ன கருமமோ..!)..) தனது பழைய கூடாரமான கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஒரு சிலரை புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அழைத்து வருகிறார்.
அதன்முதல் படியாக கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் சுகிதா,செய்தி வாசிப்பாளர் ஜெனிபர் உட்பட 4 பேர் இரு தினங்களுக்கு முன் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.அவர்கள் புதிய தலைமுறையில் இதைவிட அதிக ஊதியத்துடன் விரைவில் சேருவார்கள் எனத் தெரிகிறது.
****

